/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விநாயகர் சதுர்த்தி: 'சிசிடிவி' கண்காணிப்பு
/
விநாயகர் சதுர்த்தி: 'சிசிடிவி' கண்காணிப்பு
ADDED : செப் 07, 2024 11:39 PM

அனுப்பர்பாளையம் : -திருப்பூரில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, ஹிந்து முன்னணி உட்பட ஹிந்து இயக்கத்தினர் சார்பில், விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்து வழிபட்டு வருகின்றனர்.
திருப்பூர், அனுப்பர் பாளையம் போலீஸ் எல்லைக்குட்பட்ட ஸ்ரீநகர், மசூதி உள்ள வீதியில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள பகுதியில் நான்கு பகுதியில் 'சிசிடிவி' கேமரா பொருத்தப்பட்டு, ஸ்டேஷனில் இருந்தவாறே போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
பெருமாநல்லுாரில் ஹிந்து முன்னணி சார்பில், 18 விநாயகர், விஷ்வ ஹிந்து பரிஷத் - - 8, பொதுமக்கள் சார்பில்,- 7 ஹிந்து மக்கள் கட்சி உட்பட அமைப்பு சார்பில், மொத்தம், 36 இடங்களில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்து வழிபட்டு வருகின்றனர்.
இதில், ஹிந்து முன்னணி சார்பில், 10ம் தேதியும் மற்ற அமைப்புகள் சார்பில், 9ம் தேதியும் பிரதிஷ்டை செய்த சிலைகளை ஊர்வலமாக எடுத்து சென்று விசர்ஜனம் செய்கின்றனர்.
n குன்னத்துாரில் ஹிந்து முன்னணி சார்பில், -11, ஹிந்து மக்கள் கட்சி - 5, பொதுமக்கள் சார்பில், - 24, என மொத்தம், 40 இடங்களில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.