/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விநாயகர் சதுர்த்தி சிறப்பு பஸ்கள்
/
விநாயகர் சதுர்த்தி சிறப்பு பஸ்கள்
ADDED : செப் 07, 2024 01:24 AM
திருப்பூர்:விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை காரணமாக இன்றும், நாளையும் கூடுதலாக சிறப்பு பஸ் இயக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வாரமும் வெளியூர் செல்லும் பயணிகள் வசதிக்காக, திருப்பூர் மண்டலத்தில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. கடந்த வாரம், 50 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்ட நிலையில், நடப்பு வாரம் விநாயகர் சதுர்த்தி விடுமுறை என்பதால், கூடுதலாக பஸகள் இயக்கப்படுகிறது.
திருப்பூர் கோவில்வழி பஸ் ஸ்டாண்ட்டில் இருந்து, 40, மத்திய பஸ் ஸ்டாண்டல் இருந்தும், புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்தும் தலா, 20 வீதம், மொத்தம், 80 பஸ்கள் இயக்கப்படுகிறது. இன்று இரவு சென்னையில் இருந்து திருப்பூருக்கு, வேலுார், சேலம் வழியாக சிறப்பு பஸ் இயக்கப்படுகிறது. நாளை மற்றும் நாளை மறுதினம் இரவும் சென்னைக்கு சிறப்பு பஸ் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.