/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திருப்பூரில் இன்று விசர்ஜன ஊர்வலம்
/
திருப்பூரில் இன்று விசர்ஜன ஊர்வலம்
ADDED : செப் 10, 2024 02:33 AM

திருப்பூர்,:விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, ஹிந்து முன்னணி, சார்பில், திருப்பூர் மாவட்டம் முழுவதும், 5 ஆயிரம் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
ஹிந்து முன்னணி மாநகர மாவட்டம் சார்பில், மாநகரில் மட்டும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிலைகள் வைக்கப்பட்டு, கடந்த மூன்று நாட்களாக அன்னதானம், விளையாட்டு போட்டிகளை நடத்தினர்.
இச்சூழலில், ஹிந்து முன்னணி சார்பில், விநாயகர் சதுர்த்தி விசர்ஜன ஊர்வலம் இன்று நடக்கிறது. புதிய பஸ் ஸ்டாண்ட், தாராபுரம் ரோடு, செல்லம் நகர் ஆகிய, மூன்று இடங்களில் இருந்து ஊர்வலம் கிளம்பி, முக்கிய ரோடுகள் வழியாக ஊர்வலமாக வலம் வந்து, ஆலாங்காட்டை சென்றடைகிறது.
தொடர்ந்து, பொதுக் கூட்டம் நடக்கிறது. இதில், மத்திய இணை அமைச்சர் முருகன், ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம், மாநில பொது செயலாளர் கிஷோர்குமார், மாநில செயலாளர் செந்தில்குமார் உட்பட பலர் பேசுகின்றனர்.
போலீஸ் பாதுகாப்பு
விநாயகர் விசர்ஜன ஊர்வலத்தையொட்டி மாநகரில் பல இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கமிஷனர், துணை கமிஷனர்கள், உதவி கமிஷனர்கள் உட்பட, ஆயிரத்து, 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். வெளி மாவட்டத்தை சேர்ந்த போலீசாரும் வரவழைக்கப்பட்டனர்.
500 சிலை கரைப்பு
திருப்பூர் மாவட்டத்தில், நேற்று வி.ெஹச்.பி., - ஹிந்து முன்னணி, சிவசேனா, பாரத் சேனா, ஹிந்து சாம்ராஜ்யம் உள்ளிட்ட அமைப்புகள் சார்பில், மொத்தம், 500 சிலைகள் ஆங்காங்கே திட்டமிடப்பட்ட நீர் நிலைகளில் விசர்ஜனம் செய்யப்பட்டன.