/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விவேகா சி.பி.எஸ்.இ., பள்ளி 100 சதவீத தேர்ச்சியுடன் அசத்தல்
/
விவேகா சி.பி.எஸ்.இ., பள்ளி 100 சதவீத தேர்ச்சியுடன் அசத்தல்
விவேகா சி.பி.எஸ்.இ., பள்ளி 100 சதவீத தேர்ச்சியுடன் அசத்தல்
விவேகா சி.பி.எஸ்.இ., பள்ளி 100 சதவீத தேர்ச்சியுடன் அசத்தல்
ADDED : மே 16, 2024 05:12 AM

திருப்பூர், : திருப்பூர் மாவட்டம், அவிநாசியிலுள்ள விவேகா சி.பி.எஸ்.இ., பள்ளி பத்தாம் வகுப்பு மாணவர்கள், 81 சதவீத சராசரி மதிப்பெண் பெற்றுள்ளனர். தேர்வெழுதிய அனைத்து மாணவர்களும் முதல் வகுப்பில் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
இப்பள்ளி மாணவி ஸ்ரீடா 93 சதவீத மதிப்பெண் பெற்று முதலிடம், விகாஸ் 92.2 சதவீதத்துடன் இரண்டாமிடம், ஹரிஷ்ராஜ் 90 சதவீதம் பெற்று மூன்றாமிடம். தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவ, மாணவியரையும் பள்ளியின் செயலாளர் பிரகாஷ், தாளாளர் நித்யா பிரகாஷ், பள்ளி முதல்வர் குமார் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.
பள்ளி நிர்வாகிகள் கூறுகையில், 'எங்கள் பள்ளி மாணவர்களின் மீதான தனிக்கவனத்துடன் கூடிய கல்வித்தரத்தை, ஆண்டுதோறும் உறுதிப்படுத்தி வருகிறோம். பிரி கேஜி முதல் யு.கே.ஜி., வரை மாண்டிசோரி கற்பித்தல் முறையும், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை விளையாட்டு முறை கற்பித்தலும், ஆறு முதல் பத்தாம் வகுப்பு NCERT வரை கற்பித்தல் முறையும் செயல்பாட்டில் உள்ளது. அட்மிஷன் பற்றிய விவரங்களுக்கு 99449 19178, 96777 92631 ஆகிய மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம்,' என்றனர்.