/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஜெய்சாரதா பள்ளியில் வாலிபால் போட்டி
/
ஜெய்சாரதா பள்ளியில் வாலிபால் போட்டி
ADDED : செப் 15, 2024 01:27 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: திருப்பூர் மாவட்ட அளவிலான முதல்வர் கோப்பைக்கான வாலிபால் போட்டிகள், 15 வேலம்பாளையம் ஜெய் சாரதா மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
போட்டிகளை, அறக்கட்டளை செயலாளர் கீர்த்திகா வாணி சதீஷ் தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் மணிமலர் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு வாலிபால் கூட்டமைப்பு துணை செயலாளர் ரங்கசாமி, திருப்பூர் கூட்டமைப்பின் துணை செயலாளர் பிரகாஷ் ஆகியோர் போட்டிகளை துவக்கி வைத்தனர்.
இதில், 50க்கும் மேற்பட்ட பள்ளி, 15க்கும் மேற்பட்ட கல்லுாரிகளை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்று விளையாடினர். போட்டிகளை உடற்கல்வி ஆசிரியர் இளங்கோ தலைமையிலான குழுவினர் ஒருங்கிணைந்து நடத்தினர்.