/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தன்னார்வலர் முனைப்பு; நீர்நிலைகள் உயிர் பெறுகின்றன
/
தன்னார்வலர் முனைப்பு; நீர்நிலைகள் உயிர் பெறுகின்றன
தன்னார்வலர் முனைப்பு; நீர்நிலைகள் உயிர் பெறுகின்றன
தன்னார்வலர் முனைப்பு; நீர்நிலைகள் உயிர் பெறுகின்றன
ADDED : ஜூன் 11, 2024 12:43 AM

பல்லடம்;பல்லடம் அருகே, நீர் நிலைகளை துார்வாரும் இயக்கம் துவங்கப்பட்டு, ஓடை துார்வாரும் பணியும் நேற்று துவங்கியது.
பல்லடம் ஒன்றியம், கோடங்கிபாளையம், இச்சிப்பட்டி ஊராட்சி பகுதிகளில் உள்ள ஓடை, குளம், குட்டைகள் ஆகியவற்றை துார்வாரும் பொருட்டு, நீர்நிலைகளை துார்வாரும் இயக்கம் துவங்கப்பட்டது. கோடங்கிபாளையம் ஊராட்சி தலைவர் பழனிசாமி தலைமை வகித்தார்.
மாவட்ட ஹிந்து சமய அறநிலையத்துறை அறங்காவலர் குழு தலைவர் கீர்த்தி சுப்பிரமணியம் பணிகளை துவக்கி வைத்தார். ஊராட்சி பணிகள் குழு தலைவர் பாலசுப்பிரமணியம், ஹார்வெஸ்ட் நிறுவனங்களின் தலைவர் பழனிசாமி மற்றும் தாய்மண் பாதுகாப்பு அறக்கட்டளை நிறுவனர் பாலசுப்பிரமணியம் முன்னிலை வகித்தனர்.
நிர்வாகிகள் கூறியதாவது:
மாவட்ட நிர்வாக அனுமதியுடன் கோடங்கிபாளையம், இச்சிப்பட்டி ஊராட்சி பகுதிகளில் உள்ள, சுமார், 20 கி.மீ., துாரமுள்ள நீரோடை, 28 குளம், குட்டைகள் ஆகியவை துார்வாரப்பட உள்ளன. பல்வேறு கிராமங்கள் வழியாக செல்லும் நீரோடை, நொய்யல் நதியுடன் இணைகிறது. நீர்நிலைகளில் உள்ள சீமை கருவேல மரங்கள், விஷ முட்செடிகள் அகற்றப்பட்டு, கரைகள் பலப்படுத்தப்படுவதுடன், சேதமடைந்த தடுப்பணைகள் சீரமைக்கப்பட உள்ளன.
இதற்காக, 6 அகழ் இயந்திரம் மற்றும் லாரிகள் பயன்படுத்தப்பட உள்ளன. இன்று முதல் துார்வாரும் பணிகள் துவங்கியுள்ள நிலையில், அடுத்த ஒரு மாதத்துக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இப்பணிகளால், மழைநீர் சேகரிப்பு முழுமை பெறும். குளம், குட்டைகளில் நீர்வரத்து அதிகரித்து நிலத்தடி நீர்மட்டம் உயரும். இதனால், பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவு உள்ள பாசன நிலங்கள் பயன்பெறுவதுடன், எதிர்காலத்தில் குடிநீர் பற்றாக்குறையும் நீங்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
---
பல்லடம் ஒன்றியம், கோடங்கிபாளையம், இச்சிப்பட்டி ஊராட்சி பகுதிகளில் உள்ள ஓடை, குளம், குட்டைகள் ஆகியவற்றை துார்வாரும் பொருட்டு, நீர்நிலைகளை துார்வாரும் இயக்கம் துவங்கப்பட்டது. துார்வாரும் பணிகள், பூமி பூஜையுடன் துவங்கின.