ADDED : மே 22, 2024 12:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்;திருப்பூர் பா.ஜ., அலுவலகத்தில் ஓட்டு எண்ணிக்கை பயிற்சி முகாம் நடந்தது.
கோவை தொகுதிக்கு உட்பட்ட பல்லடம் சட்டசபை தொகுதியில் ஓட்டு எண்ணிக்கை முகவர்கள் பயிற்சி முகாம் மாநில தலைவர் அண்ணாமலை காணொலி வழிகாட்டுத லுடன் திருப்பூர் மாவட்ட பா.ஜ., அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட தலைவர் செந்தில்வேல் தலைமை வகித்தார்.
மாவட்ட பார்வையாளர் செல்வகுமார், மாவட்ட பொது செயலாளர் சீனிவாசன், மாவட்ட துணை தலைவர்கள் சுப்ரமணியம், பாலு, மாவட்ட செயலாளர் மோகன் மற்றும் மண்டல தலைவர்கள் உட்படநிர்வாகிகள் பங்கேற்றனர்.

