ADDED : ஜூன் 10, 2024 01:54 AM

அ நிறம் | அளவு
கோவை, திருப்பூர், திருச்சி, மதுரை, பழனி, பொள்ளாச்சி உள்ளிட்ட பல்வேறு முக்கிய நகரங் களுக்கு செல்லும் வழித்தடத்தில் மையப் பகுதியாக பல்லடம் உள்ளது. பல்வேறு நகரங்களில் இருந்து வரும் பஸ்களும், பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்கு வந்துதான் செல்ல வேண்டும். முகூர்த்த நாளான நேற்று, பெரும்பாலான பஸ்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது. பொதுமக்கள், மணிக்கணக்கில் காத்திருந்து பஸ் ஏறி சென்றனர்.
பொதுமக்கள் கூறுகையில், ''நெரிசலால் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் சிரமப்படுகின்றனர். முகூர்த்தம் மற்றும் பண்டிகை, விசேஷ நாட்களில் கூடுதல் பஸ்களை இயக்க போக்குவரத்து கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றனர்.
