/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வீதியை அடைத்து சுவர்: பொதுமக்கள் தவிப்பு
/
வீதியை அடைத்து சுவர்: பொதுமக்கள் தவிப்பு
ADDED : செப் 02, 2024 12:06 AM

அனுப்பர்பாளையம்;திருப்பூர், 24வது வார்டு, காந்தி நகர், அன்னை கார்டனில், ஐம்பதுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
அந்த வீதியை சேர்ந்த சிலர் அந்த வீதியில் இருந்து, மறு வீதிக்கு செல்லும் பொது பாதையை சுவர் வைத்து அடைத்துள்ளனர். அடைத்த இடத்தில் கோவில் கட்டியுள்ளனர். மறுபகுதியில் உள்ள இ.பி., காலனி, திருமலை நகர், மூகாம்பிகை காலனி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் காந்தி நகர் பிரதான சாலைக்கு நீண்டதுாரம் சுற்றி வர வேண்டியுள்ளது.
அடைக்கப்பட்டுள்ள சுவரை அகற்றகோரி பாதிக்கப்பட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பல முறை மாநகராட்சியில் முறையிட்டும் நடவடிக்கை இல்லை. முதல்வர் தனி பிரிவிற்கு புகார் தெரிவித்து உள்ளனர்.
அதனை தொடர்ந்து, மாநகராட்சி முதல் மண்டல அதிகாரிகள் சம்மந்தப்பட்ட பகுதியை ஆய்வு செய்தனர். 'பொது பாதையை அடைத்து, கட்டப்பட்டுள்ள சுவரை அகற்றாவிட்டால், சுவர் உடனடியாக அகற்றப்படும்'' என மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.
''மாநகராட்சி சார்பில், கடந்த 21ம் தேதி நோட்டீஸ் ஒட்டப்பட்டது. 10 நாட்களுக்கு மேலாகியும் இன்னும் சுவர் அகற்றப்படாமல் உள்ளது.
சுவற்றை அகற்ற அதிகாரிகள் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.