/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'டிரான்ஸ்பர்' வேண்டுமா? இவரை வழிபடலாம்...
/
'டிரான்ஸ்பர்' வேண்டுமா? இவரை வழிபடலாம்...
ADDED : செப் 07, 2024 12:51 AM

திருப்பூர் அருகே காலேஜ் ரோடு, வஞ்சிபாளையம், பொங்கவழி தோட்டம் பகுதியில், ரயில்வே டிராக் அருகே அருள்பாலிக்கிறார் செல்வ விநாயகர் என்ற 'டிரான்ஸ்பர்' வழிபாடு விநாயகர். அப்பகுதியிலுள்ள ரயில்வே ஸ்டேஷனில் பணியாற்றியவர்கள் சிலர், குடும்பத்தை விட்டு வந்து பணியாற்ற முடியாமல், செல்வ விநாயகரை வழிபட்டு 'டிரான்ஸ்பர்' கிடைத்தால் பரவாயில்லை என தினசரி வேண்டினர். வேண்டுதலுக்கு, சில நாட்களில் பலன் கிடைத்தது; பணியிட மாற்றமும் கிடைத்தது.
இத்தகவல் பல பக்கம் பரவியது. இதனால், அனைத்து அரசு துறை அலுவலர்களும் இவ்வாறு டிரான்ஸ்பார்மர் கேட்டு வழிபாடு செய்ய துவங்கினர். பக்தர்களின் உண்மையான வேண்டுதல்கள் நிறைவேறியதால், மரத்தடியில் இருந்த ஸ்ரீ செல்வ விநாயகருக்கு, கோவில் உருவானது.
ஒவ்வொருவரும் தங்களுக்கு டிரான்ஸ்பார் கிடைத்தவுடன், வேண்டுதல் நிறைவேறிய திருப்தியில், கோவிலுக்கு நன்கொடை அளித்தனர். அவ்வகையில், கோவிலில் பல திருப்பணிகள் நடந்துள்ளன. தற்போது மரத்தடியில், கொடிமரம் அருகே ஒரு விநாயகரும், கருவறையில் செல்வ விநாயகர் என அழைக்கப்படும் டிரான்ஸ்பார்மர் விநாயகரும் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.