ADDED : செப் 18, 2026 06:58 AM
அ நிறம் | அளவு
தாராபுரம்:தாராபுரம்
தொகுதி இடைத்தேர்தல் அக்., 6ல் நடக்கிறது. இந்நிலையில் தேர்தல்
பிரசார பணிகளுக்காக, தாராபுரம் பஸ் ஸ்டாண்ட் அருகில் தி.மு.க., தலைமை
தேர்தல் பணிமனையில், நேற்று மாலை தி.மு.க., சட்டத்துறை வார் ரூம்
திறப்பு விழா நடந்தது.
திருப்பூர் மாவட்ட செயலாளர் பத்மநாபன் தலைமை
வகித்தார். இதில் முன்னாள் அமைச்சர் சாமிநாதன், வார் ரூமின் பணிகள்
குறித்து பேசினார். தி.மு.க., வழக்கறிஞரணியினர் திரளாக
பங்கேற்றனர். இந்நிலையில் தளவாய்பட்டினம் மற்றும்
சுற்றுவட்டாரப் பகுதிகளில், தி.மு.க., வேட்பாளர் சுகன்யா, நேற்று
மாலை ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார்.
