/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கழிவு நீர் தேக்கம்; போராட்டம் நடத்துவோம்! அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்
/
கழிவு நீர் தேக்கம்; போராட்டம் நடத்துவோம்! அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்
கழிவு நீர் தேக்கம்; போராட்டம் நடத்துவோம்! அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்
கழிவு நீர் தேக்கம்; போராட்டம் நடத்துவோம்! அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்
ADDED : ஆக 09, 2024 12:58 AM
உடுமலை;கழிவு நீர் தேங்கும் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணாவிட்டால், போராட்டம் நடத்துவது என கணியூரில் நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
மடத்துக்குளம் அருகே கணியூர் பேரூராட்சி உள்ளது. அருகில், ஜோத்தம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட குடியிருப்புகள் அமைந்துள்ளது.
மக்கள் தொகை அதிகமுள்ள இப்பகுதியில், சுகாதாரம் சார்ந்த பிரச்னைகளால் மக்கள் தொடர்ந்து பாதிக்கின்றனர். குறிப்பாக,கணியூரில் இருந்து காரத்தொழுவு செல்லும் ரோட்டின் இருபுறங்களிலும், கழிவு நீர் நீண்ட காலமாக தேங்கி நிற்கிறது.
இதற்கு, கணியூர் பேரூராட்சி மற்றும் ஜோத்தம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பகுதியிலிருந்தும் கழிவு நீர் தொடர்ந்து திறந்தவெளியில் வெளியேற்றப்படுவது முக்கிய காரணமாக உள்ளது.
நான்கு அடி உயரத்துக்கு கழிவு நீர் ரோட்டோரத்தில் தேங்கி, கடும் சுகாதார சீர்கேடு நிலவுகிறது. நோய் பரவும் அபாயத்தில், அப்பகுதி மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
இப்பிரச்னை குறித்து விவாதிக்க, கணியூரில் அனைத்துக்கட்சி கூட்டம் நடந்தது. இதில், தி.மு.க., மா.கம்யூ., அ.தி.மு.க., காங்., வி.சி., தி.க., மற்றும் இ.கம்யூ., மற்றும் வியாபாரிகள் சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், கழிவு நீரை உடனடியாக அகற்ற வலியுறுத்தி, பொள்ளாச்சி எம்.பி., மடத்துக்குளம் எம்.எல்.ஏ., அமைச்சர்கள் சாமிநாதன், கயல்விழி ஆகியோரிடம் முதற்கட்டமாக மனு கொடுக்க முடிவெடுத்தனர். உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், ஜோத்தம்பட்டி ஊராட்சி மற்றும் கணியூர் பேரூராட்சிக்குட்பட்ட மக்களை திரட்டி போராட்டம் நடத்தவும் தீர்மானிக்கப்பட்டது.