sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

வீணடிக்கப்பட்ட 3,600 கன அடி பி.ஏ.பி., பாசன நீர்! திட்டக்குழு முன்னாள் உறுப்பினர் வேதனை

/

வீணடிக்கப்பட்ட 3,600 கன அடி பி.ஏ.பி., பாசன நீர்! திட்டக்குழு முன்னாள் உறுப்பினர் வேதனை

வீணடிக்கப்பட்ட 3,600 கன அடி பி.ஏ.பி., பாசன நீர்! திட்டக்குழு முன்னாள் உறுப்பினர் வேதனை

வீணடிக்கப்பட்ட 3,600 கன அடி பி.ஏ.பி., பாசன நீர்! திட்டக்குழு முன்னாள் உறுப்பினர் வேதனை


ADDED : செப் 06, 2024 12:05 AM

Google News

ADDED : செப் 06, 2024 12:05 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்;பி.ஏ.பி., திட்டத்தில் தவறான நீர் மேலாண்மையால், 3,600 கன அடி நீர் வீணடிக்கப்பட்டுள்ளது என, தமிழ்நாடு திட்டக்குழு (நீர் மேலாண்மைக் குழு) முன்னாள் உறுப்பினர் திவ்யார் நாகராஜன் கூறினார்.

இது குறித்து, அவர் கூறியதாவது:

திருப்பூர், கோவை மாவட்டத்தில், விவசாய நிலத்துக்கு பாசன வசதி பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டம் (பி.ஏ.பி.,) வாயிலாக பூர்த்தி செய்யப்படுகிறது.

இதற்கான நீர்வரத்து என்பது, இயற்கையாக கிடைக்கும் சொந்த நீராதாரம், சோலையாறு பவர்ஹவுஸ் - 1ல் இருந்து கிடைக்கும் நீர் மற்றும் சோலையாறு அணையின் முழு கொள்ளளவான, 160 அடிக்கு மேல் நீர் ததும்பி, உபரியாக வெளியேறி, உபரிநீர் போக்கி (சேடல்) வழியாக வெளியேறும் உபரிநீர் என, மூன்று வழிகளில் தண்ணீர் கிடைக்கிறது.

கடந்த, ஐந்தாறு நாட்களாக சோலையாறு 'சேடல்' மற்றும் பவர் ஹவுஸ்-1ல் இருந்து வரும் நீர், 1,000 கன அடியும், பரம்பிக்குளம் சொந்த நீர் வரத்தில் இருந்து, 1,000 கன அடி நீர் சேர்த்து, 2,000 கன அடி நீர் வருகிறது.

அதனால் தான், 3ம் தேதி, 71.39 அடியாக இருந்த நீர்மட்டம், 4ம் தேதி, 71.78 அடியாக உயர்ந்தது. இந்நிலையில், பரம்பிக்குளம் அணையில் இருந்து, வினாடிக்கு, 3,600 கன அடி நீர், மூன்று மதகு வழியாக வெளியேற்றப்பட்டுள்ளது.

இந்த நீர், சாலக்குடி வழியாக அரபிக்கடலில் கலந்து வீணாகிறது. கடந்த, 4ம் தேதி, 2,031 கன அடி நீர், 5ம் தேதி வரத்து, 2,034 கன அடி வரத்தாகியுள்ளது என பொதுப்பணித்துறை செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. ஒரே நாளில், 4,600 கன அடி நீர் வரத்து என்பது சரியான தகவல் இல்லை.

எனவே, கடந்த, மூன்று நாளாக சோலையாற்றில் இருந்து 'சேடல்' வழியாக நீரை திறந்து விட்டதற்கு பதிலாக, சோலையாற்றுக்கு திறந்து விட்டிருந்தால், நாம் கேரளாவுக்கு அனுப்ப வேண்டிய தண்ணீரின் கணக்கில், அது சேர்ந்திருக்கும். நம் பயன்பாட்டுக்காக தமிழக சோலையாற்றில் தேக்கி வைத்திருக்கும் நீரை, பரம்பிக்குளம் வாயிலாக வீணடித்திருக்க வேண்டிய நிலை வந்திருக்காது.

இவ்வாறு, அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us