sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

வீணாகும் குடிநீர்... சேதமாகும் சாலை!

/

வீணாகும் குடிநீர்... சேதமாகும் சாலை!

வீணாகும் குடிநீர்... சேதமாகும் சாலை!

வீணாகும் குடிநீர்... சேதமாகும் சாலை!


ADDED : மே 06, 2024 11:24 PM

Google News

ADDED : மே 06, 2024 11:24 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கால்வாய் அடைப்பு

திருப்பூர், ஆர்.வி.இ., லே-அவுட்டில் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேற வழியின்றி தேங்கியுள்ளது. கால்வாயை சுத்தம் செய்ய வேண்டும்.

- கோகுல், ஆர்.வி.இ., லே-அவுட். (படம் உண்டு)

குப்பை அள்ளுங்க...

திருமுருகன்பூண்டி பூண்டி ரிங்ரோடு, திருமுருகநாதர் கோவில் அருகே இரு வாரங்களாக குப்பைகள் தேங்கியே உள்ளது. குப்பை அள்ளுவதில்லை. இதனால், துர்நாற்றம் வீ

- ராஜகோபால் திருமுருகன்பூண்டி. (படம் உண்டு)

திருப்பூர், மண்ணரை - ராக்கியாபாளையம் பால்வாடி ஸ்கூல் வீதியில் குப்பை தேங்கியுள்ளது. தேங்கியுள்ள குப்பையை அள்ள வேண்டும்.

- வெங்கடேஷ், மண்ணரை. (படம் உண்டு)

சாலை அமைக்கணும்!

கோவில்வழி - வீரபாண்டி மெயின் ரோடு, ஜல்லிக்கற்கள் பெயர்ந்து பாதி தார்ரோடு மீதி மண் ரோடாக உள்ளது. முழுமையாக ரோடு போட வேண்டும்.

- செல்வராஜ், கோவில்வழி. (படம் உண்டு)

வீணாகும் தண்ணீர்

திருப்பூர், ஊத்துக்குளி ரோடு, மண்ணரை குளம் அருகே குழாய் உடைந்து தண்ணீர் வீணாகிறது. குழாய் உடைப்புகளை சரிசெய்ய வேண்டும்.

- சங்கரபாண்டி, மண்ணரை. (படம் உண்டு)

திருப்பூர், குமார்நகர் - சாமுண்டிபுரம் ரோட்டில் குழாய் உடைந்து, தண்ணீர் வீணாகிறது. சாலை சேதமாகிறது. குழாய் உடைப்பை சரிசெய்ய வேண்டும்.

- அருணாச்சலம், குமார்நகர். (படம் உண்டு)

தெருவிளக்கு எரிவதில்லை

திருப்பூர் எம்.எஸ்., நகர், நால்ரோடு சந்திப்பில் உள்ள உயர்கோபுர மின்விளக்கு எரிவதில்லை. இதனால், வீதிமுழுதும் இருள்சூழ்ந்து காணப்படுகிறது.

- சங்குராஜ், எம்.எஸ்., நகர். (படம் உண்டு)

குழியை மூடுங்க...

திருப்பூர் கோவில்வழி பஸ் ஸ்டாண்ட் முன் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகி சாலையே சேதமாகியுள்ளது. விபத்து ஏற்படாமல் இருக்க தற்காலிக தடுப்பு அமைத்துள்ளனர். குழியை மூடி, சாலையை சீரமைக்க வேண்டும்.

- ராமசாமி, கோவில்வழி. (படம் உண்டு)

திருப்பூர், கவுண்டநாயக்கன்பாளையம், வெங்கடாசலபதி நகரில் கேட்வால்வு பழுதாகியுள்ளது. தொடர்ந்து, தண்ணீர் வீணாகி கொண்டிருக்கிறது. கேட்வால்வு மாற்ற வேண்டும்.

- சுப்ரமணியன், கவுண்டநாயக்கன்பாளையம். (படம் உண்டு)

ரியாக் ஷன்

மின்சாரம் சேமிப்பு

திருப்பூர், ராயபுரம், ரவுண்டானாவில் பகலில் தெருவிளக்கு எரிந்து மின்சாரம் வீணாகியது. 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியான பின், விளக்கு அணக்கப்பட்டுள்ளது.

- நரசிம்மன், ராயபுரம். (படம் உண்டு)






      Dinamalar
      Follow us