sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், செப்டம்பர் 11, 2025 ,ஆவணி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

வீணாகும் தண்ணீர்; சேதமாகும் சாலைகள்  

/

வீணாகும் தண்ணீர்; சேதமாகும் சாலைகள்  

வீணாகும் தண்ணீர்; சேதமாகும் சாலைகள்  

வீணாகும் தண்ணீர்; சேதமாகும் சாலைகள்  


ADDED : ஜூலை 28, 2024 10:45 PM

Google News

ADDED : ஜூலை 28, 2024 10:45 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாய்த் தொல்லை

திருப்பூர், 15 வேலம்பாளையம், பி.டி.ஆர்., நகரில் தெருநாய்த்தொல்லை அதிகமாக உள்ளது. வாகனங்களில் செல்வோரை நாய்கள் துாரத்திக் கடிக்கின்றன.

- சர்வேஸ், பி.டி.ஆர்., நகர்.

குழாய் உடைப்பு

திருப்பூர், ஆர்.வி.இ., லே-அவுட் ஐந்தாவது வீதியில் குழாய் உடைந்து தண்ணீர் தொடர்ந்து வீணாகிறது. குழாய் உடைப்பை சரிசெய்ய வேண்டும்.

- கோகுல், ஆர்.வி.இ., லே-அவுட்.

திருப்பூர், 56வது வார்டு, கரட்டாங்காடு மூன்றாவது வீதி, புதுார் மெயின் ரோடு, எம்.ஆர்., நகர் கோவில் அருகே குழாய் உடைந்து, தண்ணீர் மூன்று மாதமாக வீணாகிறது.

- செல்வக்குமார், எம்.ஆர்., நகர்.

திருப்பூர், ஊத்துக்குளி ரோடு, எஸ்.ஆர்.சி., மில் ஸ்டாப் - அணைக்காடு பிரிவு சந்திப்பில் குழாய் உடைந்து தண்ணீர் தொடர்ந்து வீணாகி, சாலை சேதமாகியுள்ளது.

- சங்கர்சதீஷ், அணைக்காடு.

பல்லாங்குழி சாலை

திருப்பூர் ரயில்வே மேம்பாலத்தின் கீழ், பிருந்தாவன் ஓட்டல் சந்து வீதியில் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. வாகன ஓட்டிகள் தடுமாறி விழுகின்றனர். 'பேட்ஜ்ஒர்க்' மேற்கொள்ள வேண்டும்.

- பிரியதர்ஷினி, லட்சுமி நகர்.

சாலை சேதம்

திருப்பூர், பெருமாநல்லுார் ரோடு, பூலுவப்பட்டி சிக்னல் அருகே சாலை சேதமாகியுள்ளது. வாகன ஓட்டிகள் தடுமாறி விழுந்து விபத்தில் சிக்குகின்றனர். ரோடு போட வேண்டும்.

- மனோகரன், பூலுவப்பட்டி.

சாலை ஆக்கிரமிப்பு

திருப்பூர், புதிய பஸ் ஸ்டாண்ட் பின்புறம், வடக்கு உழவர் சந்தை செல்லும் சாலையை ஆக்கிரமித்து வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்படுகிறது.

- உமாசங்கர், எஸ்.வி., காலனி.

தண்ணீருக்கு தவிப்பு

திருப்பூர், கலெக்டர் அலுவலகம் கீழ்த்தளத்தில், கனரா வங்கி அருகே வைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாயில் தண்ணீர் வந்து ஒரு மாதத்துக்கு மேலாகிறது. தண்ணீரின்றி மக்கள் சிரமப்படுகின்றனர்.

- பிரேம்குமார், பல்லடம் ரோடு.

குப்பைக்கு தீவைப்பு

கணியாம்பூண்டி ஊராட்சி பகுதியில் கொட்டப்படும் குப்பைகள் அவ்வப்போது தீ வைத்து எரிப்பதால், கடந்து செல்லும் வாகன ஓட்டிகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுகிறது.

- ரஹீம்அங்குராஜ், கணியாம்பூண்டி.

கிளைகளை அகற்றலாம்

திருப்பூர், அவிநாசி ரோடு, பெரியார் காலனி பஸ் ஸ்டாப்பில் மரம் விழுந்து போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. மரக்கிளைகளை அகற்ற வேண்டும்.

- வேலு, பெரியார் காலனி.

ரியாக் ஷன்

சாலை அமைப்பு

திருப்பூர், 63 வேலம்பாளையத்தில் இருந்து சின்னக்கரை செல்லும் ரோடு கரடுமுரடாக இருந்தது. 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியான பின் ரோடு அமைத்துள்ளனர்.

- வினோத், சின்னக்கரை.

இடையூறு அகற்றம்

அவிநாசி கிழக்கு ரத வீதியில், போக்குவரத்துக்கு இடையூறாக ஆம்புலன்ஸ் நிறுத்தப்படுவது குறித்து, 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. போலீசார் ஆம்புலன்ஸ்களை வேறு பகுதிக்கு மாற்றியுள்ளனர்.

- கார்த்திக், அவிநாசி.






      Dinamalar
      Follow us