/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பால் டேங்கரில் தண்ணீர்; பனியன் நிறுவனம் ஐடியா
/
பால் டேங்கரில் தண்ணீர்; பனியன் நிறுவனம் ஐடியா
ADDED : மார் 12, 2025 12:32 AM

திருப்பூர்; ஆவின் நிறுவனத்துக்காக இயங்கிய வேனின் டேங்கரை கொண்டு, 'காம்பாக்டிங்' நிறுவனம், தண்ணீர் தொட்டியாக மாற்றியுள்ளது.
திருப்பூர், வீரபாண்டி அடுத்துள்ள பலவஞ்சிபாளையம் பகுதியில், தமிழக அரசு திட்டத்தில் மினி டெக்ஸ்டைல் பார்க் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம், கைத்தறித்துறை அமைச்சர் காந்தி மினி டெக்ஸ்டைல்ஸ் பார்க்கை திறந்து வைத்தார்.
மினி டெக்ஸ்டைல் பார்க் வளாகத்தில், காம்பாக்டிங், ரைசிங் உள்ளிட்ட நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. அங்குள்ள 'காம்பாக்டிங்' நிறுவனத்துக்கு, 'ஸ்டீம்' அமைத்துள்ளனர்.
ஸ்டீம் பாய்லரில் இருந்து கொதிக்கும் தண்ணீரை வெளியேற்றி, இருப்பு வைக்க ஏதுவாக, மினி தொட்டி ஒன்று கட்டியுள்ளனர். அதாவது, வெளியேறும் சூடான தண்ணீரை இருப்பு வைத்து, மீண்டும் பயன்படுத்த ஏதுவாக, 'ஆவின்' டேங்கர் லாரியின், டேங்கரை கொண்டு, தொட்டி வடிவமைத்துள்ளனர்.
இதுகுறித்து, காம்பாக்டிங் நிறுவன நிர்வாகிகள் கூறுகையில், 'சூடான தண்ணீரை இருப்பு வைக்க, தனியே இரும்பு தொட்டிகள் உள்ளன. எங்களிடம், 'ஆவின்' டேங்க் இருந்ததால், அதனைக் கொண்டு, பாய்லர் தண்ணீரைஇருப்பு வைக்கும் தொட்டியாக மாற்றியுள்ளோம். நீண்ட நேரம் தண்ணீர் ஆறாமல் இருப்பு வைக்கமுடியும்,' என்றனர்.