/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பி.ஏ.பி., கடைமடை பாசனத்துக்கு நீர் கேள்விக்குறி
/
பி.ஏ.பி., கடைமடை பாசனத்துக்கு நீர் கேள்விக்குறி
ADDED : ஆக 02, 2024 05:25 AM

பொங்கலுார்: சிதைந்துபோன பி.ஏ.பி., வாய்க்காலுக்கு 'ஒட்டுப்போடும்' பணி நடக்கிறது. கடைமடைக்கு நீர் செல்லுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
பி.ஏ.பி., கிளை வாய்க்கால்கள் நுாற்றுக்கணக்கான கிலோமீட்டர் நீளம் உள்ளன. இது முழுக்க முழுக்க கான்கிரீட் வாய்க்கால் ஆகும். ஆனால் தற்போது பெரும்பாலான இடங்களில், பெயர் சொல்லும் அளவிற்கு கூட கான்கிரீட் கிடையாது. காரை பெயர்ந்து முற்றிலும் மண் வாய்க்காலாக மாறிவிட்டது.
விரைவில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட உள்ளத்தை ஒட்டி வாய்க்காலில் உள்ள புதர் செடிகள், முட்புதர்களை அகற்றும் பணி முழு வீச்சில் நடக்கிறது. கான்கிரீட் சிலாப்கள் பெயர்ந்து போன ஒரு சில இடங்களில் மட்டும் ஒட்ட வைக்கும் பணி நடக்கிறது.
ஆனால் பெரும்பாலான இடங்களில் உள்ளது உள்ளபடியே உள்ளது.
தற்போது பி.ஏ.பி., தொகுப்பு அணைகள் பலத்த மழையால் நிரம்பி வழிகின்றன. உபரி நீர் கேரளாவிற்கு திருப்பி விடப்படுகிறது. கான்டூர் கால்வாய் பணிகள் ஆமை வேகத்தில் நடப்பதால் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பது தாமதம் ஆகிறது.
கான்டூர் கால்வாய் பணி முடிந்து பாசனத்திற்கு திறக்கப்பட்டாலும் கடைமடை வரை போதுமான அளவு தண்ணீர் செல்லுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. இது விவசாயிகள் மத்தியில் விரக்தியை ஏற்படுத்தி உள்ளது.