sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 தண்ணீர் அரிது; வீணாக்குதல் அவலம்

/

 தண்ணீர் அரிது; வீணாக்குதல் அவலம்

 தண்ணீர் அரிது; வீணாக்குதல் அவலம்

 தண்ணீர் அரிது; வீணாக்குதல் அவலம்


ADDED : ஜூலை 01, 2024 01:52 AM

Google News

ADDED : ஜூலை 01, 2024 01:52 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வீணாகும் தண்ணீர்

திருப்பூர் நொச்சிபாளையம் - அல்லாளபுரம் ரோட்டில், குழாய் உடைந்து, இரண்டு மாதமாக தண்ணீர் வீணாகிறது.

- சரவணக்குமார், அல்லாளபுரம். (படம் உண்டு)

திருப்பூர், பின்னி காம்பவுண்ட் ரோட்டில் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகிறது. குழாய் உடைப்பை சரிசெய்ய வேண்டும்.

- சவுபிக், பின்னி காம்பவுண்ட். (படம் உண்டு)

திருப்பூர், மத்திய பஸ் ஸ்டாண்ட் அருகே, காமராஜர் ரோட்டில் குழாய் உடைந்து தண்ணீர், 24 மணி நேரமும் வீணாகிறது.

- சங்கர்சதீஷ், காமராஜர் ரோடு. (படம் உண்டு)

அபாய மின் கம்பம்

திருப்பூர், கண்ணகி நகர், 60 அடி ரோடு, யூனியன் பேங்க் ஆப் இந்தியா எதிர்ரோட்டில் டெலிபோன் கம்பம் சாய்ந்த நிலையில் உள்ளது. விழும் முன் அகற்ற வேண்டும்.

- ராஜன், கண்ணகி நகர். (படம் உண்டு)

ஆம்புலன்ஸ் இடையூறு

அவிநாசி, கிழக்கு ரத வீதியில், போக்குவரத்துக்கு இடையூறாக ஆம்புலன்ஸ்கள் நிறுத்தி வைக்கப்படுகிறது. ஆம்புலன்ஸ்களை இடமாற்றம் செய்ய போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- அவினாசி, கார்த்திக். (படம் உண்டு)

வீணாகும் மின்சாரம்

திருப்பூர், சின்னபொம்மநாயக்கன் பாளையம், மாகாளியம்மன் கோவில் மூன்று ரோடு சந்திப்பில், ஒரே இடத்தில் இரண்டு விளக்குகள் எரிந்து மின்சாரம் வீணாகிறது.

- முருகேசன், சின்னபொம்மநாயக்கன் பாளையம். (படம் உண்டு)

கழிவுநீரால் அவதி

திருப்பூர், தாராபுரம் ரோடு, பலவஞ்சிபாளையம் பிரிவு பஸ் ஸ்டாப், நிழற்குடை முன்புறம் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.

- சுந்தரம், பலவஞ்சிபாளையம். (படம் உண்டு)

தொட்டி சேதம்

திருப்பூர், 19வது வார்டு, அம்பேத்கர் காலனி, அங்கன்வாடி மைய கட்டடத்தில் உள்ள குடிநீர் தொட்டியை சமூக விரோதிகள் சேதப்படுத்தியுள்ளனர். பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.

- ரஞ்சித், அம்பேத்கர் காலனி. (படம் உண்டு)

சுகாதாரச் சீர்கேடு

திருப்பூர், 51வது வார்டு, அரண்மனைப்புதுார், குறிஞ்சி நகர் பிரிவு பகுதியில், தேங்கியுள்ள குப்பையை அள்ள வேண்டும். மலை போல் குவிந்துள்ள குப்பையால், சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.

- மணிகண்டன், குறிஞ்சி நகர். (படம் உண்டு)

கால்வாய் அடைப்பு

கருவம்பாளையம், திருவள்ளுவர் தோட்டம் எதிர் வீதியில் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு, மண் தேங்கியுள்ளது. கழிவுநீர் செல்ல வழியில்லாமல் உள்ளது.

- சண்முகம், திருவள்ளுவர் தோட்டம். (படம் உண்டு)

ரியாக் ஷன்

மரம் அகற்றம்

திருப்பூர், பார்க் ரோட்டில் நடைபாதையில் விழுந்து கிடந்த மரம் குறித்து, 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியான பின், அகற்றப்பட்டுள்ளது.

- வின்சென்ட்ராஜ், ராயபுரம். (படம் உண்டு)

புதிய சுவிட்ச் பாக்ஸ்

திருப்பூர், பெரியாயிபாளையம், பட்டக்காரர் வீட்டு வீதியில் தெருவிளக்கு சுவிட்ச் பாக்ஸ் சேதமாகியிருந்தது. விபத்து அபாயம் இருந்தது. 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியான பின், புதிய சுவிட்ச் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

- ஆறுமுகம், பெரியாயிபாளையம். (படம் உண்டு)






      Dinamalar
      Follow us