/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குடிநீர் குழாய் உடைப்பு திட்டம்? பா.ஜ., வினர் வினோத கோரிக்கை
/
குடிநீர் குழாய் உடைப்பு திட்டம்? பா.ஜ., வினர் வினோத கோரிக்கை
குடிநீர் குழாய் உடைப்பு திட்டம்? பா.ஜ., வினர் வினோத கோரிக்கை
குடிநீர் குழாய் உடைப்பு திட்டம்? பா.ஜ., வினர் வினோத கோரிக்கை
ADDED : செப் 02, 2024 11:15 PM

திருப்பூர்;திருப்பூர் மாநகராட்சியில் பல இடங்களில் குழாய் உடைத்து குடிநீர் வெளியேறுகிறது; இதற்கு, குடிநீர் குழாய் உடைப்பு திட்டம் என பெயர் சூட்ட வலியுறுத்தி பா.ஜ.வினர் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
திருப்பூர் மாவட்ட செயலாளர் பா.ஜ., கார்த்தி தலைமையில் அக்கட்சியினர் மற்றும் பொதுமக்கள், கலெக்டர் அலுவலக குறைகேட்பு கூட்டத்தில் நேற்று நுாதன முறையில் மனு அளித்தனர்.
மாநகராட்சி பகுதிகளில் ஏராளமான இடங்களில் குடிநீர் குழாய்கள் உடைந்து தண்ணீர் வெளியேறி வீணாகிறது. இதற்கு, 'முதல்வர் குடிநீர் குழாய் உடைப்பு திட்டம்', என்று பெயர் சூட்டுங்கள்; மாநகராட்சியில் மின் கட்டண உயர்வுக்கு, கருணாநிதியின் மின் கட்டண உயர்வு திட்டம் என பெயர் சூட்ட வேண்டும் என்கிற வாசகங்கள் பொறித்த பதாகைகளை ஏந்தியவாறு, குறைகேட்பு கூட்டத்தில், கலெக்டரிடம் மனு அளித்தனர்.
மாவட்ட செயலாளர் கார்த்தி கூறியதாவது:
திருப்பூரில், வீரபாண்டி அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு சலவை தொழிலாளியிடமிருந்து, மின் கட்டணம் 1003 ரூபாய் வசூலித்துள்ளனர். விஜயாபுரத்தில் ஒரு காலியிடத்துக்கு, ஏழு ஆண்டுகளுக்கான காலியிட வரி வசூலித்தனர்; அதிலுள்ள ஓட்டு வீட்டுக்கு ஐந்தாயிரம் ரூபாய் வரி போடப்பட்டுள்ளது.
திருப்பூர் - ஊத்துக்குளி ரோட்டில், எட்டு இடங்களில் குடிநீர் குழாய் உடைத்துள்ளது. இதனை சரி செய்யாமலேயே புதிய ரோடு போடப்பட்டது. தற்போது, குழாய் உடைப்பை சரி செய்வதற்காக, ரோட்டை தோண்டுகின்றனர். இவற்றை கண்டிக்கும் வகையிலேயே, நுாதன முறையில் மனு அளித்துள்ளோம்.
இவ்வாறு, அவர் கூறினார்.
-----------------------------------------------------
குழாய் உடைப்பு, மின் கட்டண உயர்வை கண்டித்து, பா.ஜ., சார்பில், மனு அளிக்க திரண்ட நிர்வாகிகள்.