sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

தண்ணீர் விரயம்; தடுக்காதது அநியாயம்  

/

தண்ணீர் விரயம்; தடுக்காதது அநியாயம்  

தண்ணீர் விரயம்; தடுக்காதது அநியாயம்  

தண்ணீர் விரயம்; தடுக்காதது அநியாயம்  


ADDED : ஜூன் 25, 2024 12:42 AM

Google News

ADDED : ஜூன் 25, 2024 12:42 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தண்ணீர் வீண்

திருப்பூர், மங்கலம் ரோடு, ஜம்மனை பள்ளம் பாலம் பகுதியில் அவ்வப்போது தண்ணீர் பீறிட்டு வெளியேறுகிறது. தண்ணீர் வீணாவதை தடுக்க வேண்டும்.

- வின்சென்ட்ராஜ், மங்கலம் ரோடு. (படம் உண்டு)

திருப்பூர், ஆர்.வி.இ., லே-அவுட்டில் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகிறது. சாலை சேதமாகும் முன் குழாய் உடைப்பை சரிசெய்ய வேண்டும்.

- கோகுல், ஆர்.வி.இ., லே-அவுட். (படம் உண்டு)

திருப்பூர் பல்லடம் ரோடு தென்னம்பாளையத்தில் குழாய் உடைந்து தண்ணீர் சாலையில் வீணாகிறது.

- செல்வராஜ், தென்னம்பாளையம். (படம் உண்டு)

கழிவுநீர் தேக்கம்

திருப்பூர், மங்கலம் ரோடு, பூச்சக்காடு பகுதியில் கழிவுநீர் வெளியேற வழியில்லாமல், அப்படியே தேங்கியுள்ளது. துர்நாற்றம் வீசுகிறது. சுத்தம் செய்ய வேண்டும்.

- விஸ்வா, பூச்சக்காடு. (படம் உண்டு)

இருள்சூழ் வீதி

பெருமாநல்லுார், மூன்றாவது வார்டு, ஈஸ்வரன் கோவில் வீதியில், 10 நாட்களாக தெருவிளக்கு எரிவதில்லை. எரியாத விளக்குகளை மாற்றி, புதுவிளக்கு பொருத்த வேண்டும்.

- குமார், பெருமாநல்லுார். (படம் உண்டு)

சாலை சீராகுமா?

திருப்பூர், 63 வேலம்பாளையம் முதல் சின்னக்கரை வரை சாலை சீரமைப்புப் பணி துவங்கி ஒரு மாதமாகிறது. அப்படியே விடப்பட்டுள்ளது.

- வினோத், 63 வேலம்பாளையம். (படம் உண்டு)

பல்லாங்குழி சாலை

வீரபாண்டியில் இருந்து கல்லாங்காடு செல்லும் ரோடு குண்டும் குழியுமாக உள்ளது. வாகன ஓட்டிகள் தடுமாறி விழுகின்றனர். ரோடு அமைக்க வேண்டும்.

- செல்வராஜ், கல்லாங்காடு. (படம் உண்டு)

ரியாக் ஷன்

கம்பம் மாற்றம்

திருப்பூர், பூலுவபட்டி நால்ரோடு சந்திப்பு சிக்னலில் நடுரோட்டில் சிக்னல் கம்பம் இருப்பதால், விபத்து அபாயம் இருப்பதாக, 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. சிக்னல் கம்பம் ஓரமாக இடம் மாற்றப்பட்டுள்ளது.

- மனோகரன், பூலுவபட்டி. (படம் உண்டு)

உடைப்பு சீரமைப்பு

திருப்பூர், 28வது வார்டு, சிக்கண்ணா கல்லுாரி அருகே, குழாய் உடைந்து சாலையில் தண்ணீர் ஓடியது. செய்தி வெளியானதும், குழாய் உடைப்பை மாநகராட்சி ஊழியர்கள் சரிசெய்தனர்.

- சிவா, காலேஜ் ரோடு. (படம் உண்டு)






      Dinamalar
      Follow us