/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வயநாடு மண் சரிவு சோகம்; நிவாரணப்பொருட்கள் சேகரிப்பு
/
வயநாடு மண் சரிவு சோகம்; நிவாரணப்பொருட்கள் சேகரிப்பு
வயநாடு மண் சரிவு சோகம்; நிவாரணப்பொருட்கள் சேகரிப்பு
வயநாடு மண் சரிவு சோகம்; நிவாரணப்பொருட்கள் சேகரிப்பு
ADDED : ஆக 02, 2024 05:24 AM
திருப்பூர் : கேரளா, வயநாட்டில் பெரு வெள்ளத்தின் சீற்றம், 3 கிராமங்களை கபளீகரம் செய்து, 290க்கும் மேற்பட்ட உயிர்களை பலி வாங்கியிருக்கிறது.உணவு, உடை, இருப்பினும் என, அத்தியாவசிய தேவையை இழந்த நிர்கதியாய் நிற்கும் மக்களை ஆற்றுப்படுத்த நாடெங்கிலும் இருந்தும் உதவிக்கரங்கள் நீள்கின்றன. இதில், கேரள மக்கள் அதிகம் வசிக்கும் திருப்பூர் மாவட்டத்தில் இருந்தும், உதவிக்கரம் நீட்ட தயாராகி வருகின்றனர், பல்வேறு அமைப்பினர்.
பேக்கரி, டீக்கடை, ஓட்டல் என பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வரும் மலையாள மக்கள், இயற்கை சீற்றத்தால் நிர்க்கதியான தங்கள் சொந்த மாநில மக்களுக்கு உதவி செய்ய அணி திரள துவங்கி இருக்கின்றனர்.தி ரீச் பவுண்டேஷன், திருப்பூர் கேரள நண்பர்கள் சங்கத்தின் உறுப்பினர் சுனில் கூறுகையில், ''வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வயநாடு மக்களுக்கு உதவ, துணி, அரிசி உட்பட பொருட்களை சேகரித்து வருகிறோம். குறிப்பாக மக்களுக்கு அத்தியாவசிய தேவையாக உள்ள உடைகளை அதிகளவில் சேகரித்துள்ளோம். இதுவரை, 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை சேகரித்து வைத்துள்ளோம். இன்னும் ஓரிரு நாளில் அவற்றை அனுப்பி வைக்கிறோம்'' என்றனர்.