/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'எங்களுக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்!' அதிகாரியிடம் விவசாயிகள் கேள்வி
/
'எங்களுக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்!' அதிகாரியிடம் விவசாயிகள் கேள்வி
'எங்களுக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்!' அதிகாரியிடம் விவசாயிகள் கேள்வி
'எங்களுக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்!' அதிகாரியிடம் விவசாயிகள் கேள்வி
ADDED : ஜூலை 17, 2024 11:55 PM

பல்லடம் : பல்லடம் அடுத்த, வாவிபாளையம் ஊராட்சி குள்ளம்பாளையம் கிராமத்தில், உள்ள தனியார் தொட்டிக்கரி ஆலையால், நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாகவும், கடுமையான மாசு ஏற்படுவதாகவும் விவசாயிகள் தொடர்ச்சியாக புகார் அளித்தனர்.
பல்வேறு கட்ட போராட்டங்களுக்குப் பின், சமீபத்தில், ஆலையில் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள், இனி, ஆலை இயங்காது என்றும், முறையான அனுமதி பெற்ற பின் ஆலைக்கு அனுமதி வழங்குவது குறித்து ஆலோசிக்கப்படும் என, ஆலை உரிமையாளரிடம் அதிகாரிகள் கையொப்ப மும் பெற்றனர்.
மேலும், ஏற்கனவே வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவித்திருந்த நிலையில், அனுமதி ரத்து செய்யப்படவில்லை. இதையடுத்து, நேற்று முன்தினம், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தை, வாவிபாளையம் ஊராட்சி பகுதி விவசாயிகள் முற்றுகையிட்டனர்.
மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரியிடம் விவசாயிகள் கூறியதாவது:
பள்ளி, வீடுகள், விவசாய நிலம் உள்ளிட்டவை ஒரு கி.மீ., சுற்றளவுக்குள் அமைந்திருக்க, ஆலைக்கு எவ்வாறு அனுமதி கொடுத்தார்கள் என்று தெரியவில்லை. பி.டி.ஓ.,வை கேட்டால் நீங்கள்தான் அனுமதி அளித்ததாகவும், உங்களை கேட்டால், பி.டி.ஓ., ஒப்புதலின்படிதான் அனுமதி வழங்கியதாகவும் கூறுகிறீர்கள்.
இப்படியே ஒவ்வொரு துறையாக நாங்கள் சென்று வருவதா? யார் அனுமதி அளித்தது என, எங்களுக்கு உண்மை தெரிந்தாக வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஆலை இயங்காது...
விவசாயிகளிடம், மாசு கட்டுப்பாட்டு வாரிய கோட்ட பொறியாளர் சரவணகுமார்கூறுகையில், ''பி.டி.ஓ., ஒப்புதலுக்கு பின்னரே மாசுகட்டுப்பாட்டு வாரிய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த அனுமதியை ரத்து செய்ய பரிந்துரை செய்துள்ளோம். எங்களின் அனுமதி இல்லாமல் நிச்சயமாக ஆலை இயங்காது,'' என்றார். இதனால், விவசாயிகள் கலைந்து சென்றனர்.