/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இந்த வாரம் வெயில் 'கொளுத்தும்' வானிலை மையம் தகவல்
/
இந்த வாரம் வெயில் 'கொளுத்தும்' வானிலை மையம் தகவல்
ADDED : மே 30, 2024 11:46 PM
உடுமலை:'திருப்பூர் மாவட்டத்தில் இந்த வாரம் வெயில் இருக்கும்' என, வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.
தற்போது கோடையின் தாக்கம் அதிகரித்து வருகிறது. திருப்பூர் மாவட்டத்தில் போதிய மழையின்றி வெப்பம் நிலவி வருகிறது.
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், கோவை வேளாண் காலநிலை ஆராய்ச்சி நிலையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள வாராந்திர வானிலை அறிக்கை:
திருப்பூர் மாவட்டத்தில், வரும், 2ம் தேதி வரை, அதிகபட்ச வெப்பநிலை, 35 முதல், 36 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். குறைந்தபட்ச வெப்பநிலை, 21 முதல், 23 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும்.
காலை நேர காற்றின் ஈரப்பதம், 70 சதவீதமாகவும், மாலை நேர காற்றின் ஈரப்பதம், 3 சதவீதமாகவும் பதிவாக வாய்ப்புள்ளது'' என, கூறப்பட்டுள்ளது.
'மணிக்கு, 22 முதல், 26 கி.மீ., வேகத்தில் காற்று வீசும்' எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.