/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஸ்ரீநவா கல்லுாரியில் வரவேற்பு நிகழ்ச்சி
/
ஸ்ரீநவா கல்லுாரியில் வரவேற்பு நிகழ்ச்சி
ADDED : ஆக 08, 2024 12:09 AM

திருப்பூர்: வெள்ளகோவில் அருகே முத்துார், ஸ்ரீ நவா மகளிர் கல்வியியல், கல்லுாரியில் பி.எஸ்.சி., பி.எட்., முதலாம் ஆண்டு மாணவியர் வரவேற்பு விழா கொண்டாடப்பட்டது. கல்லுாரி தாளாளர் சண்முகம் தலைமை வகித்தார். கல்லுாரி செயலாளர் சக்திவேல், செயல் இயக்குனர் அசோக்குமார் முன்னிலை வகித்தனர். முன்னதாக பேராசிரியர் ராஜ்மோகன் வரவேற்றார்.
கல்லுாரி முதல்வர் தீபா, 'பெண் கல்வி, பெண்கள் வளர்த்துக் கொள்ள வேண்டிய திறமைகள்,' குறித்து விரிவாக பேசினார். இலக்கிய மன்ற விழா, விளையாட்டு விழாவில் வெற்றி பெற்றவர்கள், பல்கலை பருவத்தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவியருக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது. உதவிப்பேராசிரியர் பாலசுப்ரமணி நன்றி கூறினார்.