/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பகவானிடம் என்ன வேண்டுவது? சொற்பொழிவாளர் நாகை முகுந்தன் விளக்கம்
/
பகவானிடம் என்ன வேண்டுவது? சொற்பொழிவாளர் நாகை முகுந்தன் விளக்கம்
பகவானிடம் என்ன வேண்டுவது? சொற்பொழிவாளர் நாகை முகுந்தன் விளக்கம்
பகவானிடம் என்ன வேண்டுவது? சொற்பொழிவாளர் நாகை முகுந்தன் விளக்கம்
ADDED : மே 24, 2024 11:14 PM

திருப்பூர் : ''கோவிலில் பகவானிடம் வேண்டும் போது, அதைக் கொடு, இதைக் கொடு என்று கேட்டு பிரார்த்தனை செய்யக் கூடாது'' என, ஆன்மிக சொற்பொழிவாளர் நாகை முகுந்தன் பேசினார்.
திருப்பூர் விஸ்வேஸ் வரர் - வீரராகவப் பெருமாள் கோவில்களில் வைகாசி விசாகத் தேர்த்திருவிழா நடைபெற்று வருகிறது.
இதையொட்டி ஆன்மிக சொற்பொழிவாளர் நாகை முகுந்தன், 'தெய்வத்தின் தெய்வம்' என்ற தலைப்பில் பேசியதாவது:
ஆஞ்சநேயரை தெய்வமாக வழிபடுகிறோம். அந்த தெய்வம் ராம பிரானை தெய்வமாக வழிபட்டது. அது தான் தெய்வத்தின் தெய்வம். அந்த ராமன் ரகுகுல வம்சத்தில் பிறந்தார்; எனவே அவர் ராகவன் என்றழைக்கப்பட்டார்.
அந்த பெருமாள் வீரராகவன் என்ற பெயரில் மூன்று இடங்களில் மட்டுமே கோவில் கொண்டுள்ளார். திருவள்ளூர், மதுரை அடுத்து திருப்பூர் ஆகிய இடங்களில் இந்த கோவில்கள் அமைந்துள்ளன.
பெருமாள் சயனக் கோலத்தில் அருள் பாலிக்கும் இடங்களில் ஒவ்வொரு ஊரிலும் ஒருவித சயனக் கோலம் இருக்கும். திருச்சியில் புஜங்க சயனம்; திருவனந்தபுரத்தில் அனந்த சயனம்; கும்பகோணத்தில் உத்தார சயனம். திருப்பூரில் அவர் எழுந்தருளியுள்ளது அருள் சயனம்.
இந்த சயனக்கோலம் தன்னை நாடி வரும் பக்தர்களை நேரடியாக கண்டு, அருகே அழைத்து, அருள்பாலிக்கும் கோலம். இது மிகச் சிறப்பாக இங்கு தான் அமைந்துள்ளது. கோவிலில் சென்று பகவானிடம் வேண்டும் போது, எனக்கு இதைக் கொடு, அதைக் கொடு என்று குறிப்பிட்டுக் கேட்க கூடாது.
பகவானே நீ என்னுடனே இரு என்று தான் வேண்டுதல் வைக்க வேண்டும். பகவான் நம்முடன் இருந்தால், நாம் தவறு செய்ய மாட்டோம். இந்த உலகம் நம் பின்னால் வரும். இவ்வாறு அவர் பேசினார்.

