/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் என்னாச்சு?
/
உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் என்னாச்சு?
ADDED : ஜூலை 01, 2024 01:55 AM
திருப்பூர்;அரசாணை வெளியிட்டு ஏழு மாதங்களாகிவிட்டதால், உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டுமென, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் உள்ள, 12 ஆயிரத்து 525 கிராம ஊராட்சிகளில், விவசாயிகளுக்கு தேவையான தொழில்நுட்ப திட்ட பயன்கள் குறித்த விவரங்களை எடுத்துச்செல்ல, வேளாண்துறை மற்றும் தோட்டக்கலைத்துறையில், உதவியாளர் பணியாற்றி வருகின்றனர்.
சுழற்சி முறையில் செல்வதால், 20 நாளுக்கு ஒருமுறை மட்டுமே விரிவாக்க அலுவலர்கள் ஒரு ஊராட்சிக்கு செல்ல முடிகிறது. அலுவலகத்தை தொடர்புகொள்ள வசதியாக, கிராம அளவிலான அலுவலர் நியமிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வருகிறது.
அறிவிக்கப்பட்ட திட்டம்
அதன்படி, 2020-21ம் ஆண்டு முதல், தமிழக வேளாண்துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்து, உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி, வேளாண் தொழில்நுட்ப அரசு திட்டங்களை கொண்டு செல்ல, மூன்று முதல் நான்கு கிராமங்களுக்கு ஒருவர் என, 4,311 விரிவாக்க அலுவலர் நியமிக்கப்பட வேண்டும்.
வேளாண்துறை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல் துறை, வேளாண் வணிகம் என, அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து, ஒரே விரிவாக்க அலுவலரால் செயல்படுத்தப்படும் என்று, அமைச்சர் அறிவித்துள்ளார். அதன்படி, தமிழக அரசும், 2023 அக்., 30ம் தேதி, அரசாணை வெளியிட்டது; ஆனால், ஏழு மாதங்களாகியும், இதுவரை அமல்படுத்தப்படாமல் இருக்கிறது.
கலெக்டரிடம் வலியுறுத்தல்
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட குழு தலைவர் மதுசூதனன் கூறுகையில்,''தமிழக விவசாயிகளுக்கு விரைவில், அரசு திட்டங்கள், தொழில்நுட்பங்கள் சென்றடைய வேண்டும். அதற்காக, உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தில், கிராம அளவில் அனைத்து பணிகளையும் ஒருங்கிணைத்து செயல்படுத்த வேண்டும். தமிழக அரசு, வேளாண் உழவர் நலத்துறை அரசாணை எண் 230ஐ விரைந்து செயல்படுத்த வேண்டும்.
மாவட்ட நிர்வாகம், இதுதொடர்பாக உரிய பரிந்துரை செய்ய வேண்டுமென, கலெக்டரிடம் நேரில் வலியுறுத்தியிருக்கிறோம்,'' என்றார்.
தமிழக விவசாயிகளுக்கு விரைவில், அரசு திட்டங்கள், தொழில்நுட்பங்கள் சென்றடைய வேண்டும். அதற்காக, உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தில், கிராம அளவில் அனைத்து பணிகளையும் ஒருங்கிணைத்து செயல்படுத்த வேண்டும்.