/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆசிரியர் மாறுதல் கவுன்சிலிங் எப்போது?
/
ஆசிரியர் மாறுதல் கவுன்சிலிங் எப்போது?
ADDED : மே 27, 2024 11:32 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை;கவுன்சிலிங் நடைமுறைகளுக்கான புதிய அட்டவணை எப்போது வெளிவரும் என ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.
பணியிட மாற்றம் விரும்பும் ஆசிரியர்கள், விதிகளுக்கு உட்பட்டு விண்ணப்பிக்க, பள்ளி கல்வித்துறை அழைப்பு விடுத்தது.
கடந்த 13ம் தேதி முதல் 'எமிஸ்' இணையதளம் வாயிலாக, துவக்க, நடுநிலை மற்றும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் விண்ணப்பிக்கத்துவங்கினர். கடந்த 25ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டது. பள்ளிகள் ஜூன் 6ல் துவங்க உள்ள நிலையில், கவுன்சிலிங் குறித்து முழுமையாக அட்டவணை, விபரங்கள் வெளியாகவில்லை. கவுன்சிலிங் நடைமுறைகளுக்கான புதிய அட்டவணை எப்போது வெளியாகுமென ஆசிரியர்கள் காத்திருக்கின்றனர்.