/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வெளிநாடு பயணம் எப்போது? விருது வென்ற ஆசிரியர்களின் 'கனவு' நனவாகுமா!
/
வெளிநாடு பயணம் எப்போது? விருது வென்ற ஆசிரியர்களின் 'கனவு' நனவாகுமா!
வெளிநாடு பயணம் எப்போது? விருது வென்ற ஆசிரியர்களின் 'கனவு' நனவாகுமா!
வெளிநாடு பயணம் எப்போது? விருது வென்ற ஆசிரியர்களின் 'கனவு' நனவாகுமா!
ADDED : மே 26, 2024 12:25 AM
'கனவு ஆசிரியர் விருது'க்கு தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்கள் எப்போது வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்லப்படுவர் என்ற எதிர்பார்ப்பு தேர்வான ஆசிரியர்களிடம் அதிகரித்துள்ளது.
பள்ளிகல்வித்துறை, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மூலம், கனவு ஆசிரியர் விருதுக்கு தேர்வு நடத்தப்பட்டது. கல்வித்திறன் மற்றும் கற்பித்தல் திறன் அடிப்படையாக கொண்டு நடத்தப்பட்ட தேர்வில் மாநிலம் முழுதும் இருந்து, 8,096 ஆசிரியர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
இணையவழி முதல் சுற்று தேர்வில், 2,008 பேரும், இரண்டாம் கட்ட தேர்வில் இவர்களில் இருந்து, 992 பேரும் தேர்வாகினர். இறுதி சுற்றில், 75 சதவீதம் அதற்கும் அதிகமான மதிப்பெண் பெற்ற, 380 ஆசிரியர்கள் மாநில அரசின் கனவு ஆசிரியர்களாக தேர்வாகினர்.
இவர்கள் கல்விச்சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவர் என தமிழக அரசு அறிவித்தது. அதன்படி, 75 முதல், 89 சதவீத மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றவர்கள் (வரிசை எண் 56 முதல் 380 வரை) 325 ஆசிரியர்கள் ஏப்ரல் மாதம் இரு குழுக்களாக மாநிலம், டேராடூன் சென்று திரும்பினர்.
இந்நிலையில், கனவு ஆசிரியர் விருதுக்கு, சிரத்தையெடுத்து தயாராகி, தேர்வில், 90 முதல், நுாறு சதவீத மதிப்பெண் பெற்ற, ஒன்று முதல், 53 வரையிலான ஆசிரியர்கள் சுற்றுலா இன்னமும் இறுதி செய்யப்படாமல் உள்ளது.
கல்வித்துறை வட்டாரங்களில் விசாரித்த போது, 'துவக்கக்தில், மே மூன்று அல்லது நான்காவது வாரத்தில், ஏழு நாள் சுற்றுலா பயணம் திட்டமிடப்பட்டது. கல்வி, கலை, தொழில்நுட்பம், பாரம்பரியம், கலாசாரம் ஆகியவற்றில் சிறந்து விளங்கும் ஸ்வீடன் மற்றும் பின்லாந்து நாட்டுக்கு செல்ல முடிவெடுக்கப்பட்டது.
பாஸ்போர்ட், தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர் விபரங்கள் சரிபார்க்கும் பணி நடந்தது. ஆனால், மே மாதம் முடிய இன்னமும், ஒரு வாரம் மட்டுமே உள்ள நிலையில் சுற்றுலா பயணம் இன்னமும் தேதி இறுதி செய்யப்படாமல் உள்ளது. புதிய கல்வியாண்டு துவங்க உள்ளதால், சுற்றுலா உறுதி செய்யப்படுமா என்ற எதிர்பார்ப்பு, தேர்வாகிய கனவு ஆசிரியர் மத்தியில் எழுந்துள்ளது,' என்றனர்.