/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குப்பை கிடங்கை பூங்காவாக மாற்றுவது எப்போது? அதிகாரிகள் அலட்சியத்தால் வீணாகும் நிதி
/
குப்பை கிடங்கை பூங்காவாக மாற்றுவது எப்போது? அதிகாரிகள் அலட்சியத்தால் வீணாகும் நிதி
குப்பை கிடங்கை பூங்காவாக மாற்றுவது எப்போது? அதிகாரிகள் அலட்சியத்தால் வீணாகும் நிதி
குப்பை கிடங்கை பூங்காவாக மாற்றுவது எப்போது? அதிகாரிகள் அலட்சியத்தால் வீணாகும் நிதி
ADDED : ஆக 04, 2024 10:18 PM

உடுமலை: உடுமலை நகராட்சியில், தினமும் சேகரமாகும் குப்பை, கழிவுகள், கணபதிபாளையத்திலுள்ள, குப்பை கிடங்கில் சேகரிக்கப்பட்டது.
திடக்கழிவு மேலாண்மை திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படாத நிலையில், 6.5 ஏக்கர் பரப்பளவுள்ள, இக்குப்பை கிடங்கில், 33,700 கனமீட்டர் குப்பை மலைகளாக தேங்கி காணப்பட்டது. திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை முழுமையாக செயல்படுத்தும் வகையில், உரம் தயாரிக்கும், மூன்று நுண் உரக்குடில்கள், வீடுகள் தோறும் சென்று, மக்கும், மக்காத குப்பை தனித்தனியாக சேகரிக்கும் வகையில், துாய்மை பணியாளர்கள், வாகனங்கள் என பல கோடி ரூபாய் செலவில் திட்டம் துவக்கப்பட்டது.
இதனையடுத்து, கணபதிபாளையம் குப்பை கிடங்கில் தேங்கியுள்ள குப்பை அனைத்தையும், 'பயோமைனிங்' முறையில், முழுமையாக அரைத்து, அகற்ற, 2.2 கோடி ரூபாய் செலவிடப்பட்டது.
கடந்த, 5 ஆண்டுக்கு முன் பணிகள் நிறைவு பெற்று, குப்பை கிடங்கு முழுவதும், மரம், செடிகள் வைத்து பூங்காவாக மாற்றப்படும்.
இனிமேல் குப்பை கொண்டு செல்ல அனுமதியில்லை, குப்பை கிடங்கிற்கு மீண்டும் குப்பை வந்தால், அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
'பயோமைனிங்' முறையில் குப்பை அகற்றப்பட்ட பின், 9.5 லட்சம் ரூபாய் செலவில், மரங்கள் நடவு செய்யப்பட்டது. ஆனால், அவற்றை தொடர்ந்து பராமரிக்காததால், வளாகம் முழுவதும் புதர் மண்டி காணப்படுகிறது.
குப்பை அகற்ற செலவிடப்பட்ட, 2.2 கோடி ரூபாய் மற்றும் பூங்கா அமைக்க, மரங்கள் மற்றும் கட்டமைப்புகள் உருவாக்க செலவிடப்பட்ட, 9.5 லட்சம் ரூபாய் நிதியும் வீணாகியுள்ளது.
எனவே, கணபதிபாளையம் குப்பை கிடங்கை முழுமையாக பூங்காவாக மாற்றவும், பழைய கட்டுமானங்களை முறையாக வேறு பயன்பாட்டிற்கு உட்படுத்தவும் வேண்டும் என, மக்கள் வலியுறுத்துகின்றனர்.