ADDED : ஜூலை 06, 2024 10:49 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பல்லடம்;கரைப்புதுார் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதி அவரப்பாளையம்.
அல்லாளபுரம் வழியாக பொங்கலுார் செல்லும் ரோட்டில் அவரப்பாளையம் பிரிவு உள்ளது.இங்கிருந்த பஸ் ஸ்டாப் நிழற்குடை நீண்ட காலம் முன் அமைக்கப்பட்டது. 'குடி'மகன்களின் கூடாரமாக அலங்கோலமாக மாறிய நிலையில், அதை பயணிகள் பயன்படுத்த முடியாத அளவு மோசமாக கிடந்தது. அதனை அகற்றி, புதிய நிழற்குடை கட்டுமானம் துவங்கியது. ஆனால், 7 மாதமாகியும் கட்டுமானம் நிறைவடையாமல், பயன்பாட்டுக்கு திறக்கப்படாமல் உள்ளது.