/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
எங்கே பாதிப்பேரை காணவில்லை... அதிகாரிகளுக்கு டி.ஆர்.ஓ., 'டோஸ்'
/
எங்கே பாதிப்பேரை காணவில்லை... அதிகாரிகளுக்கு டி.ஆர்.ஓ., 'டோஸ்'
எங்கே பாதிப்பேரை காணவில்லை... அதிகாரிகளுக்கு டி.ஆர்.ஓ., 'டோஸ்'
எங்கே பாதிப்பேரை காணவில்லை... அதிகாரிகளுக்கு டி.ஆர்.ஓ., 'டோஸ்'
ADDED : செப் 05, 2024 12:40 AM
திருப்பூர் : ஆய்வுக்கூட்டத்தில் அதிகாரிகள் பலர் பங்கேற்காததால், டி.ஆர்.ஓ., கார்த்திகேயன் 'டென்ஷன்' ஆனார்.
திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், அனைத்து துறை அதிகாரிகளுக்கான ஆய்வுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. டி.ஆர்.ஓ., கார்த்திகேயன் தலைமை வகித்து, மாவட்டம் முழுவதும், பல்வேறு அரசு துறை சார்ந்து மேற்கொள்ளவேண்டிய பணிகளின் நிலை குறித்து, ஆய்வு நடத்தினார். பணிகளை நிலுவை வைத்துள்ள அதிகாரிகளுக்கு 'டோஸ்' விழுந்தது.
வழக்கம்போலவே சில அரசுத்துறை அதிகாரிகள், நேற்றைய ஆய்வுக்கூட்டத்திலும் பங்கேற்கவில்லை. மாவட்ட வழங்கல் துறை, கால்நடைத்துறை, வனத்துறை, பொதுப்பணித்துறை சார்ந்த பணிகளின் நிலை குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்க யாருமில்லை.
இதனால் டென்ஷனான டி.ஆர்.ஓ., கார்த்திகேயன், ''ஆய்வுக்கூட்டத்தில், பாதிக்கும் மேற்பட்ட அரசு துறை அதிகாரிகள் பங்கேற்கவில்லையே. ஆய்வுக்கூட்டம் குறித்து துறை சார்ந்த அலுவலர்களுக்கு முறையாக தகவல் அளிக்கப்பட்டதா, இல்லையா. பணிகளின் நிலையிலும் முன்னேற்றமில்லை; ஆய்வுக்கூட்டத்திலும் பங்கேற்கவில்லை. பணிகளின் நிலை குறித்து அறிக்கை அளிக்கவேண்டும். ஆய்வுக்கூட்டங்களில், அனைத்து அரசு துறையினரும் தவறாமல் பங்கேற்க வேண்டும்' என்றார்.
இதனை கேட்டு, அரங்கிலிருந்த அதிகாரிகளோ, மவுனமாகினர்.