ADDED : ஜூலை 21, 2024 11:39 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவிநாசி அடுத்த வேலாயுதம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட ராயன் கோவில் காலனி பகுதியில் உள்ள ஐஸ்வர்யா கார்டனில் ஒரே சமயத்தில் மூன்று மயில்கள் இறந்து கிடந்தன.
வனவர் சங்கீதா, வனக் காவலர் பொம்மன், மான் காவலர் வெங்கடேசன், கிராம உதவியாளர் சுப்பிரமணி உள்ளிட்டோர் அங்கு வந்தனர். மயில்கள் பலியானது எப்படி என்பது குறித்து உடற்கூறு ஆய்வுக்குப் பின் தெரியவரும். மயில்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.