/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குமரலிங்கம் ரோட்டை விரிவுபடுத்துங்க!
/
குமரலிங்கம் ரோட்டை விரிவுபடுத்துங்க!
ADDED : ஆக 03, 2024 05:44 AM
உடுமலை: குறிச்சிக்கோட்டையிலிருந்து குமரலிங்கம் செல்லும் ரோட்டை விரிவுபடுத்தி, விபத்துகளை தவிர்க்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
உடுமலை குறிச்சிக்கோட்டையிலிருந்து, குமரலிங்கம் செல்லும் ரோடு, நெடுஞ்சாலைத்துறையால், மாவட்ட முக்கிய ரோடுகள் பிரிவில் பராமரிக்கப்பட்டு வருகிறது.
கேரளா மூணாறு, மறையூர் உட்பட பகுதிகளிலிருந்து வரும் வாகனங்கள், உடுமலை வராமல், குறிச்சிக்கோட்டை, கொமரலிங்கம், நெய்க்காரபட்டி வழியாக பழநிக்குச்செல்ல இந்த வழித்தடம் பயன்படுகிறது.
வழித்தடத்தில், 20க்கும் அதிகமான கிராமங்கள் அமைந்துள்ளன. போக்குவரத்து பல மடங்கு அதிகரித்துள்ள நிலையில், இந்த ரோடு மேம்படுத்தப்படாமல் உள்ளது. பல இடங்களில், எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிட்டு, விலகிச்செல்ல முடியாத அளவுக்கு, ரோடு குறுகலாக உள்ளது. இடைவழித்தடமாக உள்ள ரோட்டை, மேம்படுத்த வேண்டும் என, அப்பகுதி கிராம மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
ரோட்டில், குறிச்சிக்கோட்டையை தாண்டியதும், பி.ஏ.பி., கால்வாய் அருகே, அபாய வளைவு உள்ளது. குருவப்பநாயக்கனுார் கிராமம் தாண்டியதும், அமைந்துள்ள வளைவில், வாகனங்கள் விலகிச்செல்ல முடியாத நிலை காணப்படுகிறது.
'போக்குவரத்து அதிகரித்துள்ள நிலையில், குறுகலான ரோட்டால், விபத்துகள் ஏற்படுகிறது.இப்பிரச்னைக்கு தீர்வாக, குறிச்சிக்கோட்டையிலிருந்து, குமரலிங்கம் வரை ரோட்டை விரிவுபடுத்த வேண்டும்,' என அப்பகுதி மக்கள் அரசை வலியுறுத்தியுள்ளனர்.