/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மனைவிக்கு கத்திக்குத்து; கணவர் போலீசில் சரண்
/
மனைவிக்கு கத்திக்குத்து; கணவர் போலீசில் சரண்
ADDED : ஜூன் 10, 2024 02:13 AM
திருப்பூர்;திருப்பூரில், குடும்ப பிரச்னையில் மனைவியை கத்தியால் குத்தி விட்டு, போலீஸ் ஸ்டேஷனில் கணவர் சரணடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்ட் பின்புறம் ராம்ராஜ் நகரை சேர்ந்தவர் ராமமூர்த்தி, 42; துாய்மை பணியாளர். இவரது மனைவி சத்யா, 36; பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். தம்பதியருக்கு, இரு மகன், ஒரு மகள் உள்ளனர். வீட்டில் தம்பதியர் இடையே குடும்ப பிரச்னை எழுந்து வந்தது.
நேற்று மாலை வீட்டில் இருந்த தம்பதியருக்கு இடையே மீண்டும் பிரச்னை ஏற்பட்டது. ஆத்திரமடைந்த கணவர், சமையலறையில் இருந்த கத்தியை எடுத்து, மனைவியை ஆங்காங்கே சராமாரியாக குத்தினார். மனைவி ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். அங்கிருந்து கிளம்பிய கணவர் குத்திய கத்தியுடன் திருப்பூர் தெற்கு போலீஸ் ஸ்டேஷனில் சரணடைந்து, நடந்ததை கூறினார். வீட்டிலிருந்த மனைவியை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார். ராமமூர்த்தியை கைது செய்து திருப்பூர் தெற்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.