sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

மனைவி நல வேட்பு விழா: தம்பதியர் பங்கேற்பு

/

மனைவி நல வேட்பு விழா: தம்பதியர் பங்கேற்பு

மனைவி நல வேட்பு விழா: தம்பதியர் பங்கேற்பு

மனைவி நல வேட்பு விழா: தம்பதியர் பங்கேற்பு


ADDED : செப் 01, 2024 11:37 PM

Google News

ADDED : செப் 01, 2024 11:37 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்:'பெற்றோரைப் பிறந்தகத்தைப் பிறந்த ஊரைவிட்டுபிரிந்துவந்து பெருநோக்கில் கடமையறம் ஆற்றபற்றற்ற துறவியென குடும்பத்தொண்டேற்றுபண்பாட்டின் அடிப்படையில் எனைப்பதியாய் கொண்டுஎன் நற்றவத்தால் என் வாழ்க்கைத் துணையாகிப்பெண்மை நலநோக்கில் அன்போடு கருணையிவை கொண்டுமற்றவர்க்கும் தொண்டாற்றும் மாண்புமிக்க எந்தன்மனைவியை நான் மதிக்கின்றேன் வாழ்த்தி மகிழ்கின்றேன்.

வாழ்க வளமுடன்'

கணவர்கள் மனைவியரின் கண்களை உற்றுநோக்கி, இக்கவியை உச்சரிக்கின்றனர்.

அங்கே அன்பெனும் வெள்ளம் பெருக்கெடுக்கிறது.

ஒரே இடத்தில் 750 தம்பதியர் குழுமியிருந்தனர். பரஸ்பரம் மாலை பரிமாறி, மனைவியின் கரங்களில் மலரைக் கணவரும், கணவரின் கரங்களில் கனியை மனைவியும் வழங்குகின்றனர்.

பெண்மையின் மகத்துவம்

கல்லுாரி சாலை, ஸ்ரீநிவாசா மண்டபத்தில் திருப்பூர் மனவளக்கலை மன்ற அறக்கட்டளை சார்பில் நடந்த மனைவி நல வேட்பு விழா, பெண்மையின் மகத்துவத்தை உணர்த்திய உன்னத நிகழ்ச்சியாக அமைந்தது.

இல்லாள் அகத்திருக்க, இல்லாதது ஒன்றுமில்லை; ஒவ்வொரு ஆணும், வாழ்க்கைத்துணையை நன்றியோடு வாழ்த்த, ஆண்டுதோறும் ஆக., 30ம் தேதி 'மனைவி நல வேட்பு விழா'வை அறிமுகம் செய்தவர், அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி. இந்த நாள், அவரது மனைவி லோகாம்பாள் பிறந்த தினம்.

விழாவுக்கு, மனவளக்கலை மன்ற அறக்கட்டளை தலைவர் ஆறுமுகம் தலைமை வகித்தார். மெஜஸ்டிக் குழுமங்களின் நிர்வாக இயக்குனர் கந்தசாமி முன்னிலை வகித்தார். உலக சமுதாய சேவா சங்க துணைத்தலைவர் நாகராஜன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். மேயர் தினேஷ்குமார் வாழ்த்தி பேசினார்.

விஷாலினியின் பரதநாட்டியம் நடந்தது. வேதாத்திரிய மருத்துவமனை டாக்டர் சீனியம்மாள் இறைவணக்கம் பாடினார். மனவளக்கலை மன்ற அறக்கட்டளை துணை தலைவர் முத்துசாமி, தவத்தை நடத்தினார். அறக்கட்டளை செயலாளர் முரளி உயிர் கலப்பு தவம் செய்தார். இதில், தம்பதியர் 750 பேர் பங்கேற்றனர். கணவன் - மனைவி ஒருவருக்கொருவர் மாலை அணிவித்தும், கனி, பூக்கள் பரிமாறியும், உயிர் கலப்பு தவம் செய்தனர். ஞான ஆசிரியர்கள் ஐந்து பேருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

சிறப்பு விருந்தினராக பங்கேற்று தமிழ் மையம் நிறுவனர் ஜெகத் கஸ்பர் பேசுகையில், ''மனித குல வரலாற்றில், சொன்னபடி வாழ்ந்துகாட்டிய மகான் வேதாத்ரி மகரிஷி. அவர், இந்த மனித குலத்துக்காக வந்த மாபெரும் மீட்பர்களுள் ஒருவர். மனித குல முன்னேற்றத்துக்கு, உலக சமுதாய சேவா சங்கம் போன்ற அமைப்புகள் தேவைப்படுகின்றன்'' என்றார்.

அறக்கட்டளை பொருளாளர் பாலகிருஷ்ணன் நன்றிகூறினார்.






      Dinamalar
      Follow us