/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பி.ஏ.பி., முதல் மண்டலத்துக்கு கூடுதல் சுற்று நீர் விடப்படுமா?
/
பி.ஏ.பி., முதல் மண்டலத்துக்கு கூடுதல் சுற்று நீர் விடப்படுமா?
பி.ஏ.பி., முதல் மண்டலத்துக்கு கூடுதல் சுற்று நீர் விடப்படுமா?
பி.ஏ.பி., முதல் மண்டலத்துக்கு கூடுதல் சுற்று நீர் விடப்படுமா?
ADDED : ஜூலை 05, 2024 11:23 PM
திருப்பூர்;பி.ஏ.பி., வெள்ளகோவில் கிளை கால்வாய் (காங்கயம்-வெள்ளகோவில்) நீர் பாதுகாப்பு சங்க தலைவர் வேலுசாமி, பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பின் கண்காணிப்பு பொறியாளருக்கு அனுப்பியுள்ள மனு:பி.ஏ.பி., பாசனத்தில், கடந்த முறை நீர் வினியோகத்தின் போது, முதல் மண்டல பாசனத்திற்கு, இரண்டு சுற்று தண்ணீர் கூட முழுமையாக கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டது.
நீர் திருட்டு உள்ளிட்ட பல முறைகேடுகளால், மிகப்பெரிய அளவில் நீர் இழப்பு ஏற்பட்டது. ஒரு சுற்றுக்கு, கிட்டத்தட்ட, 2,500 மில்லியன் கன அடிக்கும் மேல் நீர் திறந்துவிடப்பட்டுள்ளது; இது, மோசமான நீர் மேலாண்மை.தற்போது, ஆழியார் வடிநிலத்தில் உள்ள ஆயக்கட்டு பகுதிகளில், பயிர்களை காப்பாற்ற அரசாணை வெளியிட்டு, தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. பி.ஏ.பி., தொகுப்பு அணைகளில், நீர் இருப்பும், வரத்தும் கணிசமாக உயர்ந்திருக்கிறது. அதே நேரம், ஆயக்கட்டு பகுதிகளில் கடும் வறட்சியில் பயிர்கள் கருகிய நிலையில் உள்ளன. ஆங்காங்கே குடிநீர் பற்றாக்குறையும் நிலவுவதால், திருமூர்த்தி அணையில் இருந்து முதல் மண்டலத்திற்கு கூடுதலாக ஒரு சுற்று தண்ணீர், உடனடியாக திறந்து விட வேண்டும். நீர் திருட்டை ஒழித்து, திறம்பட நீர் வினியோகம் செய்ய வேண்டும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.