ADDED : ஜூலை 10, 2026 11:44 PM
அ நிறம் | அளவு
உடுமலை: உடுமலை புது பஸ் ஸ்டாண்டில், உயர்மின் விளக்கு இல்லாததால், இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது.
உடுமலை புது பஸ் ஸ்டாண்டில், பழநி நோக்கி செல்லும் புறநகர் பஸ்கள், கிழக்கு நோக்கி கிராமங்களுக்கு செல்லும் டவுன்பஸ்கள் இயக்கப்படுகின்றன.
இங்கு உயர்மின் விளக்கு இல்லாததால், இரவு நேரங்களில் போதிய வெளிச்சம் இல்லாமல் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். எனவே, இதை நகராட்சி அதிகாரிகள் அமைக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
