/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மேல்நிலைப்பள்ளியாக உயருமா? பெற்றோர் - மாணவர் எதிர்பார்ப்பு
/
மேல்நிலைப்பள்ளியாக உயருமா? பெற்றோர் - மாணவர் எதிர்பார்ப்பு
மேல்நிலைப்பள்ளியாக உயருமா? பெற்றோர் - மாணவர் எதிர்பார்ப்பு
மேல்நிலைப்பள்ளியாக உயருமா? பெற்றோர் - மாணவர் எதிர்பார்ப்பு
ADDED : ஜூலை 29, 2024 03:15 AM

பல்லடம்;பல்லடம் அடுத்த, காரணம்பேட்டையில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. காரணம்பேட்டை, சங்கோதிபாளையம், பருவாய் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து, 300க்கும் அதிகமான மாணவ - மாணவியர் படிக்கின்றனர். பள்ளியை தரம் உயர்த்தி மேல்நிலைப் பள்ளியாக மாற்ற வேண்டும் என, மாணவர்களின் பெற்றோர் - பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
பொதுமக்கள் கூறுகையில், 'இன்று வரை கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவியர், மேல்நிலைப் படிப்புக்காக அருகில் உள்ள வேறு பள்ளியில் சேர்க்கை பெற வேண்டியுள்ளது. இதனால், மாணவர்களின் சூழல் மாறுகிறது. எனவே, பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் பள்ளியைத்த ரம் உயர்த்த வேண்டும்'' என்றார்.
---
காரணம்பேட்டை அரசு உயர்நிலைப்பள்ளி