/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பின்தங்கிய குண்டடம் வளர்ச்சி பெறுமா?
/
பின்தங்கிய குண்டடம் வளர்ச்சி பெறுமா?
ADDED : மார் 13, 2025 06:51 AM
திருப்பூர்; திருப்பூர் மாவட்டத்தின் பின்தங்கிய வட்டாரமாக குண்டடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அப்பகுதியிலுள்ள மக்களின் வறுமை நீக்கி, பொருளாதார ஏற்றத்தாழ்வில்லாத நிலையை உருவாக்க, பல்வேறு அரசுத்துறைகள் சார்பில் திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது.
கடந்த, 2023 - 24 நிதியாண்டில், 50 வளமிகு வட்டாரங்கள் திட்டத்தை செயல்படுத்த, அரசு, 100 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. அதன்படி, திருப்பூர் மாவட்டத்தில், குண்டடடம் கிராமம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. திருப்பூர், தனி மாவட்டமாக பிரிந்த போதில் இருந்தே, குண்டடம் கிராமம், பின்தங்கிய கிராமமாக தான் அடையாளம் காணப்பட்டு வருகிறது.
அரசு திட்டங்களில் அக்கிராமத்துக்கு முன்னுரிமையும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், வளமிகு வட்டார திட்டத்தின் கீழ், அக்கிராமம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. முதல் முயற்சியாக, மாவட்ட வேலை வாய்ப்புத்துறை சார்பில், அங்கு, வேலை வாய்ப்பு பயிற்சி மையம் அமைக்க ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
அரசுப்பணி பெற ஊக்குவிப்பு!
திருப்பூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் சுரேஷ்குமார் கூறியதாவது:
திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் வேலை வாய்ப்பு பயிற்சி மையம் சார்பில், கடந்த நான்காண்டில் வழங்கப்பட்ட போட்டி தேர்வு பயிற்சியில், 43 பேர் அரசுப்பணி பெற்றுள்ளனர். வட்டார வளமிகு திட்டத்தில், குண்டடம் கிராமத்தில் வேலை வாய்ப்புத்துறை சார்பில், நுாலகத்துடன் கூடிய போட்டி தேர்வு பயிற்சி மையம் அமைக்க, கலெக்டர் ஒப்புதல் பெற்றுள்ளார். அடுத்த மாதம், 3ம் தேதி முதல் இப்பயிற்சி மையம் செயல்பட துவங்கும்.
இவ்வாறு, அவர் கூறினார்.