/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கோவை - மேல்மருவத்துார் சிறப்பு ரயில் இயக்கப்படுமா?
/
கோவை - மேல்மருவத்துார் சிறப்பு ரயில் இயக்கப்படுமா?
கோவை - மேல்மருவத்துார் சிறப்பு ரயில் இயக்கப்படுமா?
கோவை - மேல்மருவத்துார் சிறப்பு ரயில் இயக்கப்படுமா?
ADDED : ஆக 03, 2024 10:15 PM
திருப்பூர்:'கோவை - மேல்மருவத்துார் இடையே ரயில் இயக்க வேண்டும்' என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்துாரில் உள்ள பிரசித்தி பெற்ற ஆதிபராசக்தி அம்மன் கோவிலுக்கு, ஆடி மாதம் பக்தர்கள் அதிகளவில் செல்கின்றனர்; பெண் பக்தர்கள் பலரும் குழுவாக செல்வர்.
கொரோனா தொற்று காலத்துக்கு முன் கோவையில் இருந்து திருப்பூர், ஈரோடு, வழியாக மேல்மருவத்துாருக்கு இயக்கப்பட்ட சிறப்பு ரயில், தற்போது இயக்கப்படுவதில்லை.
மங்களூருவில் இருந்து சென்னை எழும்பூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில், கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் வழியாக, திருச்சி, விருத்தாச்சலம், விழுப்புரம் கடந்து, மேல்மருவத்துார் ஸ்டேஷனில் நின்று பயணித்து வந்தது.
சென்னை, தாம்பரம் ரயில்வே யார்டு சீரமைப்பு பணி காரணமாக, ஜூலை 22 முதல் இந்த ரயில், திருச்சி வரை மட்டும் இயக்கப்படுகிறது. ஆக., 16 வரை திருச்சி வரை மட்டுமே இயங்கும்.
கோவை, திருப்பூர் மாவட்டங்களில் இருந்து மேல்மருவத்துாருக்கு ரயிலில் பக்தர்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே கோவை - மேல்மருவத்துார் சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.