/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கோவை - ஈரோடு மெமு ரயில் வந்தே மெட்ரோ ரயிலாக மாறுமா?
/
கோவை - ஈரோடு மெமு ரயில் வந்தே மெட்ரோ ரயிலாக மாறுமா?
கோவை - ஈரோடு மெமு ரயில் வந்தே மெட்ரோ ரயிலாக மாறுமா?
கோவை - ஈரோடு மெமு ரயில் வந்தே மெட்ரோ ரயிலாக மாறுமா?
ADDED : ஜூலை 07, 2024 01:24 AM
திருப்பூர்;'கோவை - ஈரோடு மெமு ரயிலை, 'வந்தே மெட்ரோ' ரயிலாக மாற்ற வேண்டும்,' என்ற கோரிக்கை இப்போதே வலுத்துள்ளது.
சென்னை ஐ.சி.எப்., வளாகத்தில், 'வந்தே பாரத்' ரயிலை தொடர்ந்து, 'வந்தே மெட்ரோ' ரயில் தயாரிப்பு பணி தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக, முதல் வந்தே மெட்ரோ பணி முடிந்து, ரயில் பாதையில் இயக்கி இறுதிக்கட்ட ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அடுத்ததாக, வேக வரம்பு நிர்ணயித்து, சோதனை ஓட்டம் விரைவில் நடக்கவுள்ளது.
இந்நிலையில்,'இந்த ரயில் பயன்பாட்டுக்கு வரும் முன்னரே, பயணிகளை கவர, பெட்டிகளில் உள் அலங்காரம், சொகுசு இருக்கை உருவாக்கப்பட்டு வருகிறது. தற்போது, குறுகிய துாரத்தில் இயக்கப்பட்டு வரும் 'மெமு' ரயில்களை நீக்கி விட்டு, படிப்படியாக ஒவ்வொரு வழித்தடத்திலும் வந்தே மெட்ரோ ரயில் பெட்டிகளை இணைத்து இயக்கப்படும்,' என, ரயில்வே அறிவித்துள்ளது.
தற்போது, கோவையில் இருந்து ஈரோட்டுக்கு தினசரி மாலை, 6:10 மணிக்கு மெமு ரயில் இயக்கப்படுகிறது. திருப்பூர் வழியாக பயணிக்கும் இந்த ரயில், மூன்று மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஸ்டேஷன்களில் நின்று செல்கிறது.
மறுமார்க்கமாக தினமும் காலை, 7:50 மணிக்கு புறப்பட்டு, 9:10 மணிக்கு திருப்பூருக்கும், 10:00 மணிக்கு ரயில் கோவை வந்தடைகிறது. இந்த ரயிலில் சீசன் டிக்கெட் பெற்று, 1,500 பேர் தினமும் பயணிக்கின்றனர். மெமு ரயில்களை வந்தே மெட்ரோ ரயிலாக மாற்ற முன்வரும் போது, மேற்கு மண்டல பயணிகளின் மிகுந்த வரவேற்பை பெற்ற கோவை - ஈரோடு மெமு ரயிலை (எண்: 06800) மாற்ற வேண்டும் என்பது மேற்கு மண்டல பயணிகளின் முதல் கோரிக்கை.