/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பால் குளிரூட்டு நிலையம் கணினி மயமாக்கப்படுமா?
/
பால் குளிரூட்டு நிலையம் கணினி மயமாக்கப்படுமா?
ADDED : ஏப் 29, 2024 12:22 AM
பல்லடம்;பல்லடம் அடுத்த, கே.அய்யம்பாளையம் கிராமத்தில் ஆவின் குளிரூட்டு நிலையம் உள்ளது. சுற்றுவட்டாரத்தில் பல்வேறு கிராமங்களில் உள்ள ஆவின் சொசைட்டிகளில் இருந்து கொண்டு வரப்படும் பால் இங்கு குளிரூட்டப்படுகிறது. பணிக்கம்பட்டி ஊராட்சி, சின்னியகவுண்டம்பாளையம் கிராம விவசாயிகள் கூறியதாவது: இங்குள்ள ஆவின் சொசைட்டியில் இருந்து தினசரி காலை மற்றும் மாலை நேரங்களில், 80 லிட்டர் பால் கே.அய்யம்பாளையம் குளிரூட்டு நிலையத்திற்கு அனுப்பப்படுகிறது. அய்யம்பாளையம் குளிரூட்டு நிலையம், 5 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்டது.
இங்கு, பாலின் தரத்தை சோதனை செய்ய 'அனலைசர்' இயந்திரம் மட்டுமே உள்ளது. உடனுக்குடன் ஆய்வு அறிக்கையை பிரின்ட் எடுப்பதற்கான வசதி கிடையாது. ஆய்வு அறிக்கையை கையில் எழுதுவதை தவிர்த்து, முற்றிலும் கணினிமயமாக்க வேண்டும்.

