/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'ஸ்பாண்டக்ஸ்' விலை குறையுமா? தொழில் துறையினர் எதிர்பார்ப்பு
/
'ஸ்பாண்டக்ஸ்' விலை குறையுமா? தொழில் துறையினர் எதிர்பார்ப்பு
'ஸ்பாண்டக்ஸ்' விலை குறையுமா? தொழில் துறையினர் எதிர்பார்ப்பு
'ஸ்பாண்டக்ஸ்' விலை குறையுமா? தொழில் துறையினர் எதிர்பார்ப்பு
ADDED : ஆக 01, 2024 01:36 AM

திருப்பூர் : இளைஞர்கள், இளம்பெண்கள் மத்தியில், லைக்ரா ஆடைகள் மீதான மோகம் அதிகரித்துள்ளது. குறிப்பாக, 'பிட்'டான உடை அணிய வேண்டும் என்று ஆசைப்படுவோருக்காக, 'லைக்ரா' எனப்படும் துணியில் ஆடை தயாரிக்கப்படுகிறது.
இதேபோல், ஜீன்ஸ், லெகின்ஸ், விளையாட்டு வீரர் அணியும் சீருடைகள் தயாரிக்க, 'லைக்ரா' அதிகம் பயன்படுத்தப் படுகிறது. இவ்வித ஆடை தயாரிப்புக்கும் 'லைக்ரா' தயாரிப்புக்கும், 'ஸ்பாண்டக்ஸ்' நுால் பயன்பாடு அத்தியாவசியமானது.
தென்கொரியா, சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்து, 'ஸ்பாண்டக்ஸ்' இறக்குமதி செய்யப்படுகிறது. ஒவ்வொரு மாதமும், இந்தியாவுக்கு மட்டும், 4,500 டன் அளவுக்கு, 'ஸ்பாண்டக்ஸ்' இறக்கு மதியாகிறது. திருப்பூருக்கு மட்டும், மாதம், 500 டன் தேவைப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி, கிலோ 400 முதல், 450 ரூபாய் அளவுக்கு விற்கப்படுகிறது.
மத்திய பட்ஜெட்டில், ஆயத்த ஆடை உற்பத்தியை ஊக்குவிக்க ஏதுவாக, 'ஸ்பாண்டக்ஸ்' இறக்குமதி வரி, 7.50 சதவீதமாக இருந்து, 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில், ஹவுரங்காபாத்தில் உள்ள ஒருநிறுவனம் மட்டுமே உற்பத்தி செய்கிறது. இதனால், பெரும்பாலான தேவை, இறக்குமதியை சார்ந்தே இருக்கிறது.
இந்நிலையில், இறக்குமதி வரியை குறைத்துள்ளதால், 'ஸ்பாண்டக்ஸ்' விலை குறையுமா என, பின்னலாடை உற்பத்தியாளர் காத்திருக்கின்றனர்.
பெரிய மாற்றம் இருக்காது...
இதுகுறித்து, 'ஆல் இந்தியா ஸ்பாண்டக்ஸ் இம்போட்டர்ஸ் அசோசியேஷன்' செயலாளர் ரமணன் கூறுகையில், 'ஸ்பாண்டக்ஸ்' என்பது, பல்வேறு மூலப்பொருளை கொண்டு உற்பத்தி செய்யப்படுகிறது.
அவற்றில், இறக்குமதிவரி சலுகை சில மூலப்பொருட்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று உற்பத்தியாளர் கூறுகின்றனர்.
இறக்குமதி வரி குறைக்கப்பட்டதால், விலையில் பெரிய மாற்றம் ஏற்பட வாய்ப்பில்லை. பட்ஜெட் அறிவிப்பு தொடர்பான முழுமையான அறிவிப்பு கிடைத்த பின்னரே, வரி குறைப்பால் பயன் கிடைக்குமா என்பது தெரியும்,'' என்றார்.