/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சாலைப்பணி தரம் சிறக்குமா? கால்வாய்ப்பணி வேகம் பெறுமா?
/
சாலைப்பணி தரம் சிறக்குமா? கால்வாய்ப்பணி வேகம் பெறுமா?
சாலைப்பணி தரம் சிறக்குமா? கால்வாய்ப்பணி வேகம் பெறுமா?
சாலைப்பணி தரம் சிறக்குமா? கால்வாய்ப்பணி வேகம் பெறுமா?
ADDED : ஏப் 08, 2024 12:51 AM

தொட்டி இல்லை
திருப்பூர், நாச்சிபாளையம் பஸ் ஸ்டாப், செந்தில் நகர், டி.கே.எஸ் நகர், பகவதி அம்மன் நகர், விஷ்ணுபிரியா கார்டன் பகுதியில் குப்பை தொட்டி இல்லை. குப்பை பொது வெயிலில் அப்படியே வீசியெறிப்படுகிறது.
- ராஜேந்திரன், நாச்சிபாளையம். (படம் உண்டு)
கால்வாய் அடைப்பு
திருப்பூர், 15 வேலம்பாளையம் மெயின் ரோட்டில், கால்வாய் அடைப்பு ஏற்பட்டு சாலையில் தேங்குகிறது. சாலை சேதமாகிறது. கால்வாய் அடைப்பை சரிசெய்ய வேண்டும்.
- சுல்பிகர் அலி, 15 வேலம்பாளையம். (படம் உண்டு)
பணி மந்தம்
திருப்பூர், மூன்றாவது வார்டு, அம்மன் நகரில் கால்வாய் கட்டும் பணி மந்தமாக நடக்கிறது. வீடுகள் முன் கழிவுநீர் தேங்கி நிற்பதால், வாகனங்கள் சென்று வர முடியவில்லை.
- கார்த்திகாயினி, அம்மன்நகர். (படம் உண்டு)
தரமற்ற பணி
திருப்பூர், அனுப்பர்பாளையம், திலகர் நகரில் தார் சாலை தரமில்லாமல் அமைக்கப்பட்டுள்ளது. முழுமையாக மண்ணை அகற்றாமல் சாலை அமைத்துள்ளனர். பணியை முழுமையாக முடிக்க வேண்டும்.
- வரதராஜ், திலகர் நகர். (படம் உண்டு)
ஒளிராத விளக்கு
திருப்பூர், கூலிபாளையம் நால்ரோட்டில் உயர்கோபுர மின்விளக்கில் பாதி மட்டும் எரிகிறது. மீதி பாதி விளக்குகள் எரிவதில்லை. எரியாத விளக்குகளை சரிசெய்ய வேண்டும்.
- பிரியதர்ஷன், கூலிபாளையம். (படம் உண்டு)
வீணாகும் தண்ணீர்
அவிநாசி, ஆட்டையாம்பாளையம் - கருவலுார் ரோட்டில் குழாய் உடைந்து தண்ணீர் சாலையில் வீணாகிறது. குழாய் உடைப்பை சரிசெய்ய வேண்டும்.
- பரமசிவம், ஆட்டையாம்பாளையம். (படம் உண்டு)
ரியாக் ஷன்
குப்பை மாயம்
திருப்பூர், நாச்சிபாளையம் - புளியாண்டம்பாளையம் சாலையில் குப்பை தேங்கியிருந்தது. 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியான பின், குப்பை அள்ளப்பட்டு விட்டது.
- ராஜேந்திரன், நாச்சிபாளையம். (படம் உண்டு)

