ADDED : ஜூன் 25, 2024 01:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அனுப்பர்பாளையம்;திருப்பூர் மாநகராட்சி, 24வது வார்டு பா.ஜ.,வினர், மாநகராட்சி முதல் மண்டல உதவி கமிஷனர் கனகராஜிடம் அளித்த மனு:
24வது வார்டு, அம்மன் வீதிகளில் இரண்டு மற்றும் மூன்றாவது வீதியில் பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் குழாய் பதிக்க கான்கிரீட் சாலை உடைத்து, தோண்டப்பட்டது. பணி முடிந்து, ஒரு ஆண்டுக்கு மேலாகியும் இதுவரை தோண்டப்பட்ட கான்கிரீட் சாலை சீர் செய்யப்படவில்லை. சாலை குண்டும் குழியுமாக இருப்பதால், போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. சாலை சீராக்கப்பட வேண்டும். குடிநீர் 10 நாளுக்கு ஒருமுறையே வருகிறது. நான்கு நாட்களுக்கு ஒருமுறை வினியோகிக்க வேண்டும்.