sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

உலக கோப்பை நம் வசமாகுமா?

/

உலக கோப்பை நம் வசமாகுமா?

உலக கோப்பை நம் வசமாகுமா?

உலக கோப்பை நம் வசமாகுமா?


ADDED : ஜூன் 29, 2024 01:31 AM

Google News

ADDED : ஜூன் 29, 2024 01:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டி20 உலக கோப்பை இறுதிப்போட்டியில், இன்று இந்தியா - தென் ஆப்ரிக்கா அணிகள் மோதுகின்றன. இந்தியா கோப்பை வெல்லும் என்று நம் தேசம் காத்திருக்கிறது. திருப்பூரைச் சேர்ந்த கிரிக்கெட் ஆர்வலர்களின் கருத்துகள், இதோ...

மழை குறுக்கிடாதிருந்தால்

இந்திய வெற்றி உறுதி

தென் ஆப்ரிக்க அணியை விட, இந்திய அணிக்கு ஒரு படி வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது. காரணம், நான்கு ஸ்பின்னர்கள் உள்ளனர். ஆடுகளத்தின் நிலை அறிந்து சிறப்பாக விளையாடுவர். ஜடேஜா பார்முக்கு திரும்புவர் என எதிர்பார்க்கலாம். இன்றும் பும்ரா, அக்ஷர் படேல், குல்தீப் அசத்துவர். பேட்டிங்கில் கோலி சாதிக்க தவறினாலும், ரோஹித் ஈடுசெய்வார். சோபிக்காத ஷிவம் துபே இன்று நன்றாக விளையாடலாம். டாஸ் வென்றால் 'பேட்டிங்' தைரியமாக தேர்வு செய்யலாம். மழை குறுக்கிடாதிருந்தால் இந்திய வெற்றி உறுதி.

- பாலகிருஷ்ணன், உடற்கல்வி ஆசிரியர்,

சின்னச்சாமி அம்மாள் பள்ளி, திருப்பூர்

நம் வீரர்களிடம்

நேர்மறை எண்ணம்

டாஸில் வெல்லும் அணி, விக்கெட் இழப்பு இருந்தாலும், 20 ஓவர் தொடர்ந்து ஆட வேண்டும். அப்போது தான், போட்டி விறுவிறுப்பாக இருக்கும். துவக்கத்தில் விக்கெட் இழந்து, மந்தமாக ஆடினால், போட்டியின் போக்கை பலரும் அறிந்து விடுவர். இரு அணிகளும் சமபலத்துடன் இருப்பதால், கடைசி நேரம் வரை விறுவிறுப்பாக போட்டி இருக்கும். வெற்றி பெறுவோம் என்ற நேர்மறை எண்ணம் நம் வீரர்களிடம் உள்ளது. இறுதிப்போட்டிக்குள் முதல்முறையாக தென் ஆப்ரிக்கா நுழைந்துள்ளதால், அவ்வளவு எளிதில் அவர்களும் வீழ்ந்து விட வாய்ப்பில்லை. முதல் 'பவர் பிளே' முக்கியம். கோலி இதிலாவது விளையாட வேண்டும். பும்ரா கலக்கினால், வெற்றி கட்டாயம்.

- பாலாஜி, சாமுண்டிபுரம்.

தெ.ஆ., பழிதீர்க்க

முயற்சிக்கும்

'டாப் 10' பேட்ஸ்மேன் பட்டியலில் தென் ஆப்ரிக்கா அணி வீரர் யாருமில்லை. ஆனால், நம் அணியின் ரோஹித், கோலி, சூர்ய குமார், ரிஷப் பண்ட் உள்ளனர். குயின்டன் டி காக் பேட்டிங்கை நம்பித்தான் தென் ஆப்ரிக்க அணி உள்ளது.

இந்திய அணி பேட்டிங், பவுலிங் இரண்டிலும் முழு பார்மில் உள்ளது. தென் ஆப்ரிக்க அணி, முதல் பத்து ஓவர் சூப்பராக ஆடுவர். அடுத்து பத்து ஓவர் எதிரணியின் பந்துவீச்சில் தடுமாறி விடுவர். நம் ஸ்பின்னர்களிடம் விளையாடவே திணறுவர். போட்டி நடக்கவுள்ள மைதானத்தில், 170 ரன்னுக்கும் மேல் எந்த அணியும் எடுக்கவில்லை. முதலில் பேட்டிங் செய்யும் அணி, அதிக ரன் குவித்தால், எதிரணி 'சேசிங்' செய்து வெற்றி பெறுவது கடினம். இதுவரை உலக கோப்பை வெல்லாத அணி என்பதால், தென்ஆப்ரிக்க அணி பழி தீர்க்க முயற்சிக்கும். எப்படியிருந்தாலும், நமக்குத்தான் கோப்பை.

- குமார், உடற்கல்வி இயக்குனர்,

அரசு மேல்நிலைப்பள்ளி, மடத்துக்குளம்.

---

150 ரன்னுக்குள் சுருட்டணும்

தென் ஆப்ரிக்க அணியில் ஸ்பின்னர்கள் 'வீக்காக' உள்ளனர். பேட்ஸ்மேன்களால் பந்துக்களை நாலாபுறமும் சிதறடிக்கப்படுகின்றன. இந்திய அணி, ஓவருக்கு ஆறு ரன் எடுத்தால் ரன் ரேட் உயரும். கடைசி நேர பிரஷர் இருக்காது. கடைசி ஐந்து ஓவரில் ரன்னும் நிச்சயம் உயரும்.

இறுதிப்போட்டியில், 200 ரன் குவித்து விட்டால், இந்திய அணி தைரியமாக பந்து வீசலாம். எதிரணிக்கு நெருக்கடி கொடுக்க முடியும். தென் ஆப்ரிக்க அணிக்கு நல்ல பேட்டிங் ஆர்டர் உள்ளது. டாஸில் வென்று, தென் ஆப்ரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்தால், 150 ரன்னுக்குள் சுருட்டினால்தான் நாம் வெல்வது எளிது. தென் ஆப்ரிக்க வேகப்பந்தில் நாம் சற்று தடுமாறினாலும், ஸ்பின்னிங்கில் அடித்து நொறுக்கலாம்.

- கிருஷ்ணன், பயிற்சியாளர், சுலோச்சனா மில்ஸ் கிரிக்கெட் அகாடமி, பல்லடம்.

----

முதல் ஒரு மணி நேரம்

கவனம் அவசியம்

கடந்த ஐந்து மாதத்தில், ஐ.பி.எல்., உட்பட அதிக 'டி-20' கிரிக்கெட் போட்டிகளில், விளையாடிய அனுபவம் இந்திய அணிக்கு உண்டு; அந்த அனுபவம் தென் ஆப்ரிக்காவுக்கு இல்லை. அரையிறுதி, இறுதிப்போட்டி அதிகமாக பங்கேற்றது, வெற்றி பெற்றது நம் அணி தான். இறுதிப்போட்டியில் நம் வீரர்கள் 'பிரஷர்' உடன் செயல்பட மாட்டார்கள். இந்திய அணி முதலில் களமிறங்கி கூடுதல் ரன் குவித்தாலும், எதிர்த்து ஆடக்கூடிய திறன் தென் ஆப்ரிக்காவிடம் உள்ளது. மழை பெய்தால், மைதானம் ஈரப்பதமாகி விடும். பேட்டிங்கோ, பவுலிங்கோ முதல் ஒரு மணி நேரம் கவனமுடன் விளையாட வேண்டும். நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு நல்லதோர் இறுதி ஆட்டத்தை ரசிகர்கள் காண முடியும்.

- வேல்முருகன், மேலாளர், திருப்பூர் மாவட்ட கிரிக்கெட் சங்கம்.






      Dinamalar
      Follow us