ADDED : ஆக 11, 2024 12:44 AM
அ நிறம் | அளவு
திருப்பூரில் தொழில்நுட்பக் கண்காட்சிகள் அதிகளவில் நடக்கின்றன. நிரந்தரக் கண்காட்சி வளாகம் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை தொழில்துறையினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
ஆனால், மத்திய, மாநில அரசுகள், இதற்கு எந்த முக்கியத்துவமும் அளிக்காமல் உள்ளன. கோவை 'கொடிசியா' போன்று வளாகம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி, பின்னலாடைத்துறையினர் ஒன்றிணைந்து கோரிக்கையை வலுப்படுத்த உள்ளனர்.
