/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'தண்ணீர் இன்றி எந்த உயிரும் இல்லை'
/
'தண்ணீர் இன்றி எந்த உயிரும் இல்லை'
ADDED : ஆக 01, 2024 01:39 AM

பல்லடம்: பல்லடம் வனம் அமைப்பின் வான்மழை மாதாந்திர கருத்தரங்கம், வனாலயம் அடிகளார் அரங்கில் நடந்தது. அதன் தலைவர் சுவாதி கண்ணன் தலைமை வகித்தார். செயலாளர் சுந்தரராஜ் வரவேற்றார்.
இதில், ஆனைமலை சித்தர் பீட நிறுவனர்ஸ்ரீ சத்தியந்திரர் பேசியதாவது:
பஞ்ச பூதங்கள் மட்டுமே உலகில் மிகப்பெரும் சக்திகள். இவற்றின் ஆற்றல், நாம் வசிக்கும் இடத்தில் சமநிலையில் இருந்தால் எந்த பிரச்னையும் வராது. உடலை பக்குவப்படுத்தி வைத்துக் கொண்டால் மட்டுமே பஞ்ச பூதங்களும் சமநிலையில் இருக்கும்.
பஞ்ச பூதங்களில் அனைத்து விதமான வைட்டமின்களும் உள்ளன. சித்தர்கள், ஞானிகள் இப்படிப்பட்ட வைட்டமின்களை எடுத்துக் கொண்டுதான் நீண்ட நெடுங்காலம் தவம் செய்தனர். உடம்பின் இயக்கமும் உலகின் இயக்கமும் ஒன்றே.
உலக இயக்கத்தில் இருந்து உடம்பு சற்று விலகி நிற்பதே நோய். உருவம், வடிவம், நிறம் இல்லை; ஆனால், தண்ணீர் இல்லாமல் எந்த உயிரும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக, கோவை கே.ஜி., குழுமங்களின் தலைவர் பாலகிருஷ்ணன் மற்றும் ஊத்தங்கரை மரப்பயிர் ஆலோசகர் கணேசன் பேசினார்.