/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
உரிமைத்தொகை மனு பெண்கள் குவிந்தனர்
/
உரிமைத்தொகை மனு பெண்கள் குவிந்தனர்
ADDED : ஆக 19, 2024 11:03 PM

திருப்பூர்;கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த குறைகேட்பு கூட்டத்தில், மகளிர் உரிமைத்தொகை கோரும் விண்ணப்பங்களுடன் ஏராளமான பெண்கள் திரண்டனர். பொதுமக்களிடமிருந்து மொத்தம் 752 மனுக்கள் பெறப்பட்டன. இதில், 300க்கும் மேல், மகளிர் உரிமைத்தொகை மனுக்கள். வழக்கமாக பொதுமக்களிடமிருந்து, 500 மனுக்களே பெறப்படும். உரிமைத்தொகை கோரும் விண்ணப்பங்கள் அதிகரிப்பால், மனுக்களை ஒவ்வொன்றாக ஸ்கேன் செய்து பதிவு செய்ய அலுவலர்கள் திணறினர். கடந்த 17ம் தேதி மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பம் பெற முகாம் நடப்பதாக பரவிய வதந்தியை நம்பி கலெக்டர் அலுவலகத்தில் பெண்கள் குவிந்தது குறிப்பிடத்தக்கது.
பொதுமக்கள் கூறுகையில், ''அரசு வகுத்துள்ள தகுதிகள் இருந்தும் கூட, எங்களை மகளிர் உரிமைத்தொகை பயனாளிகள் பட்டியலில் சேர்க்கவில்லை. நியாயமான கோரிக்கையை, அரசின் கவனத்துக்கு கொண்டுசெல்லும்வகையில் தற்போது மனு அளித்துள்ளோம்' என்றனர்.
---
மகளிர் உரிமைத்தொகை கேட்டு விண்ணப்பங்களை வழங்க கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று பெண்கள் அதிகளவில் வந்திருந்தனர்.