/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஐ.டி.ஐ., வளாகத்தில் மகளிர் தின விழா
/
ஐ.டி.ஐ., வளாகத்தில் மகளிர் தின விழா
ADDED : மார் 07, 2025 11:09 PM
திருப்பூர்; திருப்பூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.
திருப்பூர் ஐ.டி.ஐ., மற்றும் காந்தி நகர் ரோட்டரி ஆகியன இணைந்து நடத்திய மகளிர் தின விழாவில், நிலைய முதல்வர் பிரபு தலைமை வகித்தார்.
காந்தி நகர் ரோட்டரி தலைவர் உமாகாந்த், ஆன்மிக பேச்சாளர் புவனேஸ்வரி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பேசினர்.
'வாழ்க்கையில், பல்வேறு சாதனைகள் புரிந்த பெண்கள், ஒழுக்க குணம் கொண்டவர்களாகவும், கட்டுப்பாடான வாழ்க்கை முறையையும் பின்பற்றினர். அதனால் பாதுகாப்பான வாழ்வும், எடுத்துக்காட்டான வாழ்வு வாழ்ந்தனர்,' என்று தங்களது சிறப்புரையில் குறிப்பிட்டனர்.
நிகழ்ச்சியில், ரோட்டரி நிர்வாகிகள் மற்றும் நிலைய ஒருங்கிணைப்பாளர்கள், கோபாலகிருஷ்ணன், ரவீந்திரன், கிருபானந்தம், பார்த்தசாரதி, ரமேஷ்குமார், விஜயராகவன், ராஜாமணி உட் பட பலர் பங்கேற்றனர்.